பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


164 அண்ணல் அநுமன்

பேராசிரியர் இராதாகிருஷ்ணன் விருதையும் (1994 - 1000 வெண்பொற்காசுகள்), சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையம் இவர்தம் வைணவ வெளியீடுகளைச் சிறப்பிக்கும் முறையில் பூரீ இராமாநுசர் விருதையும் (1996 - 25,000 வெண் பொற்காசுகள்) வழங்கிச் சிறப்பித்தன.

மேலும், இவர்தம் இயற்றமிழ்ப் பணியைப் பாராட்டி இயல் இசை நாடக மன்றம் (அரசு) கலைமாமணி விருதையும் (1999), பல்வேறு துறைகளில் இவர்தம் அனைத்துப் பணிகளையும் பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக் கழகம் டிலிட். (கெளரவம்) பட்டத்தையும் (1999), இவர்தம் நீண்டகாலத் தமிழ்ப்பணியைப் பாராட்டி நூற்றாண்டு அறக்கட்டளை (காஞ்சி காமகோடி பீடம்) சேவாரத்னா விருதையும் (1999) வழங்கிச் சிறப்பித்தன.

இனிமை, எளிமை, தெளிவு ஆகியன இவர்தம் நூல்களின் சிறப்பியல்புகளாகும்.