பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சொல்லின் செல்வன் 25

(2) கக்கிரீவனிடம் இராமனின் சிறப்பைக் கூறுதல் : இலக்குவன் கூற இராமனது வரலாற்றை அறிந்துகொண்ட அநுமன், அவன் திருவடிகளில் வீழ்ந்து தண்டனிட்டான். பின்னர்ச் சுக்கிரீவனைக் கொணர்வதற்காக விடைபெற்று விரைந்து செல்லலானான், இராமபிரானது அனந்த கல்யாண குணங்களையெல்லாம் நினைந்தவண்ணம். சுக்கிரீவனிடம், "பெருமானே, நீ ஐயுற்றவாறு அவன் வாலியைச் சேர்ந்தவன் அல்லன்; அவ்வாலியையே வெல்லத்தக்க மிக்க பலம் பெற்ற வீரன்’ என்று கூறி அவனது மனக்கவலையை மாற்றுகின்றான்.

பின்னர் இராமனைப்பற்றியும் அவனது பெருமையைப் பற்றியும் கூறுகின்றான்.இதில் மாருதியின் சொல்திறன் மனம் கவர்வதாக இருப்பதைக் காணலாம்.

மூன்று பாடல்களில் (நட்புக்கோள் படலம்) இராம லக்குமணர்களின் தன்மையை

"மண்ணுளார் விண்ணுளார்

மாறுளார் வேறுளார் எண்ணுளார் இயல்உளார்

இசையுளார் திசையுளார் கண்ணுளர் ஆயினார்

பகையுளார் கழிநெடும் புண்ணுளர் ஆருயிர்க்கு

அமிழ்தமே போல்உளார்" (3) (மண் - நில உலகம் விண் - உம்பர் உலகம் மாறு - பாதளம் வேறு - வேறு உலகங்கள்; கண் - கண்ணாக)

"ஆழியான் மைந்தர்பேர்

அறிவினார் அழகினார் ஊழியால் எளிதினில்நிற்கு

அரசுதந்து உதவுவார்" (4) (ஆழியான் - தசரதன் நிற்கு - உனக்கு)

" நீதியார் கருணையின்

நெறியினார் நெறிவயின் பேதியா நிலைமையார்

எவரினும் பெருமையார்