இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும்
ஜஸ்டிஸ் டாக்டர் மு.மு. இஸ்மாயீல்
சென்னைக் கம்பன் கழகம் கண்டதுடன் மாவட்டந்தோறும் கவின்பெறும் வண்ணம் கம்பன் கழகங்கள் கான வழிவகைகள் செய்து கம்பன் புகழ் பரவக் காரணபூதர் நீதி அரசர் டாக்டர் மு.மு. இஸ்மாயீல் அவர்கட்கு
அன்புப் படையல்
செம்பொருள் ஒன்றென் றுணர்ந்தமெய்ஞ் ஞான
தேசிகர்; எட்டய புரத்து நம்பரெம் உமறே மீளவும் இங்கே
நண்ணினன் எனவுல குரைப்பக் கம்பனை உணர்ந்து திறமுறப் பகரும்
கண்ணியர்; புண்ணியர்; சீலர்; தம்பமாய் நீதி புரந்தஇஸ் மாயீல் தகவினுக் குரியதிந் நூலே.