பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சிந்தனைச் செம்மல் 51

போந்த புண்ணியன் கண்ணகன் கோயிலுட் புக்கான்' (போந்த பிறந்த புண்ணியன் - நல்வினைகளை யுடையவனான (வீடணன்); கண் - இடம் அகல் - அகன்ற) அவனை நெருங்கிச் சென்று தருமம் அன்னான்தனை உற்று - சிந்திக்கின்றான். தனது நுண் உணர்வினால்,

"குற்றம் இல்லதோர் குணத்தினன்

இவன்எனக் கொண்டான்'

இவன் திறத்து மாருதிக்குக் கோபம் தலைகாட்ட வில்லை.

இந்திரசித்தன் : அடுத்துப் பல்வேறு இடங்களைக் கடந்து, தன் மன வேகத்திற்கும் முன்னதாக,

"இந்தி ரன்சிறை இருந்தவா

யிலின்கடை எதிர்ந்தான்."" என்று இந்திரசித்தன் வீட்டினது கடைவாயிலை அடைகின்றான். முருகப்பெருமானை ஒத்திருக்கும் இந்திரசித்துவைக் காண்கின்றான்." அவனைப்பற்றி,

"வளையும் வாள்.எயிற்று அரக்கனோ

கணிச்சியான் மகனோ? அளையில் வாள்அரி அனையவன் மகனோ அறியேன்.""

8. சுந்தர. ஊர்தேடு - 135

9. சுந்தர. ஊர்தேடு - 137

10. சுந்தர. ஊர்தேடு - 138. இராவணன் திக்கு விசயம் செய்தபோது, இந்திரனை எதிர்த்துப் போர் செய்கின்றான். இந்திரனை வெல்ல முடியாது போகவே, இராவணன் மகனான மேகநாதன் மாயையால் மறைந்து பொருது, இந்திரனைக் கலங்கச்செய்து அவனை மாய பாசத்தால் கட்டிக்கொண்டு போய் இலங்கையில் தன் வீட்டுவாசலில் சிறைவைக்கிறான். பின்னர், சிறை மீட்க வந்த நான்முகனால் இந்திரசித்து எனச் சிறப்புப்பெயர் இடப் பெறுகின்றான். இவ்வரலாறு உத்தர காண்டத்தில் உள்ளது.

11. சுந்தர. ஊர்தேடு - 140

12. சுந்தர. ஊர்தேடு - 141