பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அண்ணாவின் ஆறு கதைகள்




“அத்தே! உன் காலைக் கும்பிடுகிறேன். எங்க பாட்டி வந்தா என்னைப் பிணமாக்கிடுவாங்க. காரி உமிழ்வார்களே. நான் ஒரு பாபமும் அறியேன். அடபாவி உன்னாலே இந்த தீம்பு வந்ததே !”

“அவனை ஏண்டி சபிக்கிறே! உனக்கு எங்க போச்சு புத்தி?”

“என்னைக் காப்பாத்துங்கோ அத்தே! உங்க காலிலே விழறேன்.”

“சரி! நான் சொல்றபடி கேட்பதாகச் சத்தியம் செய்! கை போட்டுக் கொடு!”

“சத்தியமா, உங்க பேச்சைக் கேட்டு நடக்கிறேன். மாரியாயி சாட்சியா!”

“சரி! நான் இங்கே கண்டதை ஒருவரிடமும் சொல்லவில்லை, என் மகனைக் கட்டிக்கொள்ள வேண்டும்.”

“பழனியையா? நான் மாட்டேன்,”

“சத்தியத்தை மறந்தா சாப்பிட மண்கூடக் கிடைக்காது; மாரிமேல் சத்தியம் செய்ததை மறந்துடாதே,”

“ஐயோ! இது என்ன கஷ்ட காலம், நான் என்ன செய்வேன்?”

“சத்தியத்தின்படி நடக்கிறாயா, இல்லையானா வீட்டிலே இருப்பவர்களைக் கூப்பிடவா?”

“கூப்பிடாதீங்க. பழனியைக் கட்டிக்கொள்கிறேன். சத்தியமாகதான்.”

“இப்ப சரி ! வேலா ! இன்னம் எவ்வளவு நாழிதாண்டா, மரத்தின் பின்னாலே இருக்கப்போறே?”

வள்ளியை மிரட்டி தனக்கு இணங்க வைத்த அத்தை மரத்தின் மறைவிலே போய்ப் பார்க்க, அங்கு, வேலன் இல்லாதது கண்டு திடுக்கிட்டாள்.