உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

சுட்டிக்காட்டி இது வெற்றி பெற்றால் நில விநியோகம் வரம்பு கட்டுவதற்கு அவசியமிராது என்று கூறியுள்ளார். இப்படிச் சொல்லும்போது சட்டமன்றத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கும் ஸ்ரீ வினோபா அவர்களிடம் எங்களுக்கு மதிப்பு இல்லை என்று அர்த்தம் இல்லை இந்த நாடும், இந்த நாட்டிலுள்ள அத்தனை பேராலும் நன்கு மதித்து போற்றப்படுகிறவர் என்பதோடுகூட வெளிஉலகமெல்லாம் பெரிதும் போற்றி மதிக்கப்படுகின்றவர் ஸ்ரீ வினோபா என்ற காரணத்தினாலே அவர்கள் நிலச் சீர்திருத்தத்தைப்பற்றி என்ன சொல்லி வருகிறார்கள் என்பதைச் சபையில் எடுத்துக்காட்டி அதைப் பரிசீலிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆனால், வினோபா அவர்கள் செய்துகொண்டுவருகின்ற பூதான இயக்கம் வெற்றி பெற்றுவிடுமானால். நிலத்தைப் பங்கிடுவதோ, வரம்பு கட்டுவதோ தேவையில்லாமல் போய்விடும் என்று எடுத்துச்சொல்லி, தங்களுடைய பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளுவதற்கு வினோபாவை அவர்கள் ஒரு திரையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்று நான் ஐயப்படுகிறேன். நான் ஏன் அப்படி ஐயப்படுகிறேனென்றால் இந்த சர்க்காரைப் பற்றியும் இந்தச் சர்க்கார் நிலச்சீர்திருத்தத்தை எந்த வகையிலே கவனிப்பார்கள் என்பதைப்பற்றியும், இந்தச் சபையாலே போற்றிப் புகழப்பட்டு உலகத்தாரால் மதிக்கப்பட்டு வரும் வினோபா அவர்கள் சமீபகாலத்திற்கு முன்னாலேயே எடுத்துச் சொல்லியிருக்கிற கருத்தை இந்தச் சபையினுடைய கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்புகிறேன்.

"We cannot except that the present Government manned mostly by the land owning class will enact such land legislation which will harm their own interests. Even when they try to introduce land reforms they give ample time for the landowners to distribute among themselves or sell their lands so that they may not be affected by the law and thus the law becomes a mere force".

"சட்டம் என்பதை ஒரு கேலிக்கூத்து ஆக்குகின்ற தன்மையில் சட்டத்தை கொண்டுவருகிறேன், கொண்டுவருகிறேன், என்று நிலச் சொந்தக்காரர்களை உஷார்படுத்தி சட்டம் வந்த காலத்தில் எப்படி எப்படி அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்