உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 களுக்குப் பணிவன்புடன் கூறிக்கொள்கிறேன். இந்த சட்டமன் றத்தில் அடிக்கடி கூறப்படுகிறது. நாங்கள்தான் அந்நாட்டுக்குத் தியாகம் செய்திருக்கிறோம், நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கப்படுகிறது. என்னுடைய கட்சியை பொறுத்தவரையில் எங்களைச்சார்ந்திருந்த தலைவர்கள் வேண்டுமானால் நீங்கள் சொல்லு வதை ஏற்றுக்கொள்ளலாம். அவர்களில் ஒரு சிலர் இன்றைய தினம் உங்கள் நண்பர்களாகிவிட்டார்கள், (கைதட்டல்) எங்களை பொறுத்தவரையில் "ஊருக்கிளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி" என்பது போன்று நாங்கள் பிரச்னைகளைப் பற்றி சொல்லு கின்ற நேரத்தில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைத்து சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அதை விட்டு வீட்டு பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்கு ஆவன செய்யவேண்டு மென்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நான் சில யோசனை களை சொல்லுவதற்கு முன்னால் தொழில் துறையில் எந்த நிலையில் இருந்தது என்பதற்கு 1945-1951-ல் Uader the Post War Development Scheme-the industries development-ல் என் னென்ன தொழில்கள் இருந்தன என்பதை இந்த சபையின் கவ னத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்- 1. The Soap Institute and Sonp Factory at Calicut; 2. The Oil Factory and Hydrogenation Unit at Calicut; 3. Shark Liver Oil Un tat Calicut; 4. 5. Coir School and Coir Production in Andhra; Oil Institute at Anantapur; 6. Ceramic Factory at Gundur: 7. Bangle Manufacturing Unit at Kalahasti; 8. Paper Factory at Rajabmuudry : 9. Kollegal Silk Filature Factory ; 10. A Cottage Industrial and Chemical Testing Labora tory at Madras. இவைகளில் முக்கியமான பெரும்பகுதியை மொழி வழி மாகாண பிரிவினையின் காரணமாக நாம் இழந்திருக்கிறோம். இதில் இருக் கின்ற வேடிக்கை என்ன வென்றால் இந்தத் திட்டங்கள் இருந்த காலத்தில் இதற்காக எவ்வளவோ அதிகாரிகள் இருந்தார்கள். இப்போது இதே துறையில் அதிகம கமாக அதிகாரிகள் இருப்பதாக அறிகிறேன். நான் கூறுவதில் தவறு இருக்குமானால் என்னை திருத்தவேண்டிய கடமை அமைச்சர் அவர்களுக்கு இருக்கிறது.