________________
82 அதைப் பொறுத்துதான் தமிழ் நாட்டின் எதிர்கால அமைதி இருக்கிறது, இங்கே நாம் ஏதாவது ஒரு பக்கத்தில் இன்றைய தினம் ஒன்றுசேர்ந்து அதற்கான ஆதாரங்களை திரட்டியும், செய்தி களை வகுத்தும் பிரித்தும் கட்சிகளின் சார்பாக செய்துவிடுகின்ற காரணத்தினாலே அங்கே இருக்கின்ற புகைச்சலை நம்மால் அடக்கி விட முடியாது என்னைச்சார்ந்தவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் இதில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் அங்கு ஆதித்திராவிட மக்களுக்கு-இன்றுமட்டுமல்ல, நீ ண்ட நெடுங்காலமாக இழைக்கப்பட்டிருக்கின்ற பெரிய கொடுமை களை அவர்கள் சகித்துக்கொண்டிருப்பதாகக் கூறினார்கள். அவர் களுக்கு வரக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே கண்டுபிடிப்ப தற்கு வக்கு இல்லாமல் இருக்கின்ற நிலையிலே, அதனை சட்டபூர்வ மாக தடுப்பதற்கு வழி இல்லாமல், இரண்டு பெரிய ஜாதியின ரிடையே தீராத பகையை மூட்டிவிட்டார்கள் என்ற காரணத்தி னாலே இந்த அமைச்சர் அவையின்பேரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நம்பிக்கையில்லை என்.- நான் தெரிவித்துக் கொள்ளுகிறேன், அங்கே ஆதிதிராவிட மக்களின் அல்லலை மற்ற வர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதனை உறுப்பினர்கள் எடுத்துச் சொன்னார்கள், அதுமட்டுமல்ல போலீஸ் மந்திரி அவர் கள் ரோம் நாட்டிலே ரோம் தீப்பிடித்து எரிகின்ற நேரத்திலே நீரோ மன்னர் பிடில் வாசித்ததாக பழைய வரலாற்றைக் குறிப் பிட்டார்கள். புதிய ஆராய்ச்சியாளர்கள் அப்படி நீரோ மன்னர் அப்பொழுது பிடில் வாசிக்கவில்லை என்று முடிவுகட்டியிருக்கிறார். கள். எரிகின்ற வீட்டில் ஏதோ கிடைத்தவரையில் லாபம் என்று அகப்பட்டதை பிடுங்கிக்கொண்டார்கள் என்ற தமிழ்நாட்டு பழ மொழியை ஒரு உறுப்பினர் சொன்னார்கள். இதற்கு முன்னாலே நான் வருத்தத்தோடு கூறியிருப்பேன். இன்றைய தினம் பெருமை யோடு சொல்லுகின்றேன் அந்த வட்டாரத்தில் எங்கள் கழகத்திற்கு இதுவரையிலே ஊன்றுகோல் இல்லை 25 ஆண்டுகளாக நான் பொது வாழ்வில் இருக்கின்றேன். நான் பரமகுடிக்கு அப்பால் போய் பேசியதில்லையே என்று எண்ணியது உண்டு. அங்கெல்லாம் நம் கழகம் பரவவில்லையே என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இப்பொழுது நான் எண்ணிக் கொள்ளுகிறேன் நல்ல வேளையாகப் பரவவில்லை என்று, பரவியிருந்தால், அங்கே மூட்டப்பட்ட தீயிலே எந்த அளவுக்கு எங்களுக்கும் பங்கு உண்டு என்று சொல் லப்படுமோ, அங்கே நடந்த கொலைகளுக்கு நாங்கள் எத்தனை