உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

களிலிருந்தும், உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் தொழில்களை நிறுவி நடத்தும் பெருமக்கள் பலர் ஆயிரக்கணக்கில் குழுமியுள்ள இக்காட்சி போல், இதற்கு முன் நாம் கண்டதில்லை. இனி ஒரு நாள் பார்ப்போமா என்பதும் ஐயமே!

இம்மாதம் சென்னை மாநகரில் அடுத்தடுத்துச் சிறப்புக்குரிய மாநாடுகள் நடந்துள்ளன. உலகத் தமிழ் மாநாடு நடந்தது. அதை அடுத்துத் தேசிய ஒலிம்பிக் நிகழ்ச்சிகள் நடந்தன. அதைத் தொடர்ந்து, இம்மகத்தான பொருட்காட்சி ஏற்பாடாகியுள்ளது. இதன் பொலிவை முமுமையாக்கிடத் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன. மனித குலமே இன்னும் முழு நிறைவை நாடித்தான் பாடு பட்டு வருகிறது. உலகம் முழுவதையும் எடுத்துக் கொண்டாலும், இன்னும் அது நிறைவை எட்டாமல்தான் உள்ளது.

இப்பொருட்காட்சியின் அமைப்பாளர்கள் எத்தனை வசதிக் குறைவுகளிடையே இம்மாபெரும் முயற்சியில் செயலாற்ற வேண்டியிருந்தது என்பதை நான் நேரில் அறிவேன். இப் பொருட்காட்சி நம் சாதனைகளின் ஒரு தொகுப்பென்றே சொல்லலாம். நம் ஆவலின் அளவு, சாதனைகளின் அளவை மீறியதாகும்.

நாம் காணுகிற இந்த வளமையும், செழிப்பும் கோடிக்கணக்கான நம் மக்களுக்கானதாக இருக்க வேண்டுமேயல்லாமல், இச்செல்வச் செழிப்பெல்-