பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்: இலங்காதிபதி, வழக்குமன்றத்திலே நிற்கிறார், பள்ளிக் கூடத்திலே அல்ல ! இரா: நீதியின் கூடத்திலே நிறுத்தப்பட்டு இருக்கிறேன், ஆகவேதான் என்மீது சாட்டப்பட்ட குற்றத்தின் தன்மையை, குற்றம் சாட்டுபவர்கள் முதலில் விளக்கவேண்டும் என்று கேட் கிறேன். உங்களுக்குத் தண்டிக்கமட்டுந்தான் தெரியுமா? விளக்கவும் தெரியவேண்டுமே! கூறுங்கள் இரக்கம் என்றால் என்ன ? எது இரக்கம் ? உங்களைக் கேட்கிறேன் ? உங்களை! ஊமையாகிவிட்டீர்கள்? இரக்கம் என்றால் உங்களை! ஏன் என்ன பொருள்? நீதி: இரக்கம் என்றால், பிறருடைய நிலைமை கண்டு வேதனையைக் கண்டு, பரிதாபப்படுவது, மனம் இளகுவது, இளகி அவர்களுக்கு இதம் செய்வது... கம்: இதம் செய்யாவிட்டாலும் போகிறது, இன்னல் செய்யாமலாவது இருப்பது. இரா அதாவது தன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற ஆதிக்கம் இருக்கவேண்டும். அந்த ஆதிக்கத் தைக் கண்டு அஞ்சுபவன் ஒருவன் இருக்கிறான், அவனால் ஆதிக்கக்காரனை எதிர்க்கவோ, தடுக்கவோ முடியாது, அந்த நிலையிலே அவன் இருக்கும் பரிதாபகரமான, உதவியற்ற நிலைமையைக் கண்டு மனம் உருகுவது, அவனுக்குக் கேடு ஏதும் செய்யாதிருப்பது. கூடுமானால், அவனுக்குள்ள கஷ்டத்தைப் போக்குவது; இதுதானே இரக்கம். கம்: மகாபண்டிதன்ல்லவா! அருமையான வியாக்யானம் செய்துவிட்டாய் இரக்கம் என்ற தத்துவத்திற்கு! இரா: தாகவிடாயால் தவித்துக் கொண்டிருக்கிறது ஒரு புள்ளிமான்! அடவியிலே நீர்தேடி அலைகிறது! அந்த நேரத்திலே சிறுத்தை ஒன்று மானைக் கண்டுவிடுகிறது, மான் மிரள்கிறது, சிறுத்தை அதன் நிலை கண்டு, மனம் இளகி, பாபம், இந்த மானைக்க கொல்லலாகாது என்று தீர்மானித்து, இரக்கப்பட்டு, மானை அருகாமையிலுள்ள நீர் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அது நீர் பருகும்போது வேறு துஷ்டமிருகத்தால் ஒரு தீங்கும் நேரிடாத படி காத்துக்கொண்டிருக்கிறது; அதுதானே இரக்கம் ! கம்: சிலாக்கியமான இரக்கம்! ஆனால் சாத்தியமா என்பது வேறு லிஷயம்.

111

110