பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது சரியா? சீதையை நான் களவாடி சிறைவைத்தேன்! மூவர்கள் இதுபோல் பலமுறை செய்திருக்கிறார்களே! நான் சீதையின் சம்மதம் கிடைக்கட்டும் என்று, சிந்தையில் மூண்ட காமத்தைக்கூட அடக்கினேன், மூவர்கள். அழகிகளைக் கண்ட நேரத்தில், அடக்கமுடியாத காமத்தால், ஆபாசங்கள் செய் திருக்கின்றனரே! எந்தத் தேவன், கற்பை மதித்தான்? எத்தனை ஆஸ்ரமங்கள் விபசார விடுதிகளாக இருந்ததற்குச் சான்று வேண்டும்? மானைக்காட்டி மயக்கினேன் என்று கூறினர், முருகன் யானையைக் காட்டி மிரட்டினானே வள்ளியை! இங்கே உள்ள தேவரும் மூவரும் செய்யாததை நான் செய்ததாக ருஜுப் படுத்தும் பார்ப்போம்! சீதை போன்ற ஜெகன்மோகினி, என் கரத்திலே சிக்கியும், சீரழிக்காது நான் விட்டதுபோல, எந்தச் சிங்காரியையாவது, தேவரும், மூவரும் விட்டிருப்பாரா? கூறுங்கள். இரக்கம் இல்லை என்று குற்றம் சாற்றினது அக்ரமம்! அதற்காக இலங்கையை அழித்தது அநீதி! என்வேலை தீர்ந்தது. இனி நீதியின் வேலை நடக்கட்டும். [நீதிதேவன் திடீரென்று மயங்கிக் கீழே சாய்கிறான். ஜூரிகள் எழுந்து நிற்கிறார்கள். நீதிதேவனுக்கு மயக்கம் தெளிந்தபிறகு தீர்ப்பு என்று கோர்ட் சேவகர் தெரிவிக்கிறார். அது நெடுநாளைக்குப் பிறகு தானே சாத்தியம்! என்று கூறிக் கொண்டே இராவணன் போய்விட கோர்ட் கலைகிறது. கம்பர், அவசரத்திலே கால் இடறிக் கீழே வீழ்கிறார்.)

122

121