உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
[ஜம்புலிங்கம் இதுவரை சாந்தமாக பேசி வந்தார். அவரும் கடுகடுப்போடு பேசத் தொடங்கினார்]

ஜ: ஆமாம், இப்ப உன் கிட்டே, காசு கொட்டிக் கொடுத்தாத்தான் நான் காங்கிரஸ்காரன்னு ஒத்துக்கொள்ளவே போலிருக்கு—ஏண்டா தம்பீ! நீ வந்து அந்த மகாநாடு இந்த மகாநாடுன்னு சொல்லுவே, உடனே நான், பெட்டிச் சாவியை உன்னிடம் எடுத்துக்கொடுத்துவிட்டு வந்தேமாதரம்னு சொல்லவேணும், நீ தொறந்து உனக்கு வேணும்கிற பணத்தை எடுத்துக்கிட்டு ஜெய் ஹிந்த் சொல்லிவிட்டுப் போயிடுவே—இல்லையா—இதைச்செய்தா நான் நல்லவன்—இல்லையானா பொல்லாதவன்—அப்படித்தானே—இந்த வேலை நல்லா இருக்கு தம்பீ! திராவிடத்தானுங்க எதிர்க்கிறானுங்க, அதனாலே என்கிட்ட பணத்தைக் கொட்டு, அவனும் நானும், நாயே பேயேன்னு ஏசிக்கிட்டு போறோம், நீ, நோட்டு நோட்டா நீட்டு, இதுதானா, உன் பிளான்......

பீ: மரியாதையாப் பேசு—தெரியுதா—வார்த்தைகளை அளந்து பேசு—உன்னைப் போல சுயநலக்காரனுங்க இருக்கிறதாலேதான், திராவிடத்தானுங்க அந்தப் போடு போடறாங்க—அவனுங்க பேசறதிலே என்ன தப்பு இருக்கு—கதர் கட்டிக்கொண்டு கள்ள மார்க்கட் கழுகுகள் இருக்குன்னு சொன்னாங்களே, திராவிடத்தானுங்க அவங்க வாய்க்குச் சர்க்கரை போடவேணும்.

[ஜம்புலிங்கம் எழுந்து நின்றுக்கொண்டு ஆத்திரமாகக் கூவினார்]

ஜ: ஏலே...ஏய்...! இதோபாரு...போயி, சந்துமுனையிலே நின்னுகிட்டு கத்து, இங்கே பேசாதே...எழுந்திரு...மரியாதையா.

பீ: யாருக்கு மரியாதை இல்லே......யாருக்கு. மகாத்மா பேரைச் சொல்லிக்கிட்டு ஜனங்களை ஏமாத்திகிட்டு, மாசமாசம் மூவாயிரம் நாலாயிரம்னு அடிக்கறியே கொள்ளே நூல் பர்மிட்டிலே, அதைத்தான் திராவிடத்தானுங்க பேசி, மானத்தை வாங்கறானுங்க. வேணும் உங்களுக்கு—இதுவும் வேணும் இதுக்கு மேலேயும் வேணும்......

ஜ: வீணா அவமானம் அடையப் போறே—ஏய்! நான் கள்ளமார்க்கட்காரன். அதானே.....பேசாதே.....இதோபார், கதர் போட்டிகிட்டிருக்கறேன்—காங்கிரசிலே இருக்கறேன் பர்மிட்டிலே கொள்ளை அடிக்கிறேன்—அதானே. நீ சொல்றது.....போடா, போயி, நீயும் அந்தத் திராவிடத்தானுங்களோட கூடிக் கொண்டு,

130