சீ: (பீமராவைப் பார்த்து) என்ன பீமராவ்! பிரமாதமான கோபம்—ரெளத்ராகாரம்.
பீ: கோபமா!.....எனக்கா! ஆமாம்....நீ வேறு எப்படிப் பேசுவே...இந்த முப்பது வருஷகாலமாக நான் இந்தத் தேசத்திலே என் சக்திக்கு மீறின அளவு சேவை செய்துவருகிறேன். என்னை......இப்போது, புதுசா முளைத்த களான்கள் கண்டபடி ஏசினால்கூட நான் பொறுமையாக இருக்க வேண்டும் போலிருக்கு.
ஜ: பார், சாமி! பார்...இப்ப ஏசுவது யார்னு நீயே பாரு.....காளானாம் நான், காளான்.....கேட்டயா...கர்ணம் போட்டாங்க என் எதிரே முன்னே......இரண்டே இரண்டு கதர்வேட்டி போதும்; ஒரே ஒரு கையெழுத்து போதும், காங்கிரசிலே சேரலாம்னு, இப்ப நான், காளான்.....எப்படி இருக்கு நியாயம்! அதுவும் யார் சொல்லறது........இந்த சோளக் கொல்லைப் பொம்மை......!!
பீ: மரியாதையாக பேசணும்னு மறுபடியும் சொல்றேன்....புதுசா மழைக்காலத்திலே முளைக்கிறது காளான்—அதுபோலத் தேர்தல் காலத்திலே கிளம்பும் தலைவர்களைக் காளான் என்று சொல்வது தவறல்ல! ஏசுவதாகாது.....கண்களை உருட்டலாம், பற்களை நறநறவெனக் கடிக்கலாம்....உம்ம வீட்டிலே வந்திருக்கிறேன் என்கிறதாலே, ஆளை விட்டு அடித்துக்கூடப் போடலாம். ஆனா அதற்கெல்லாம் அஞ்சுபவனல்ல, இந்த பீரங்கி பீமராவ் நாயுடு......!
ச: சார்! பீரங்கி! அதெல்லாம் கிடைக்கட்டும்—காளான் என்றால் கேவலம் என்கிறீரா?
காளான்—என்றால் எதற்கும் உதவாத, கேவலமான பொருள்—(எம். எல். ஏ. வைக் காட்டி) இவரை ஏசுவது முறையா, இல்லையா என்பதுகூடக் கிடக்கிட்டும், இப்ப, எனக்குத் தெரிய வேண்டியது இது, காளான் என்றால் கேவலமானது, உபயோகமில்லாதது என்கிறீரா........இது தெரியவேணும் இப்போ.......பிரசாரத்திலே பிரக்யாதி வாய்ந்தவர்........தெரியும். எதிரிகளை ஏசுவதிலே சமர்த்தர்—தெரியும்—இல்லாமலா பீரங்கி பீமராவ் நாயுடு என்று பட்டம் இருக்கு........
132