த: ஆமா, எம்.எல்.ஏ., ஆவதற்கு முன்பு என்ன இருந்தது, இப்ப எவ்வளவு இருக்கு—எப்படி இவ்வளவு சொத்து கிடைச்சுது, இதெல்லாம் கண்டு பிடிக்கவேணுமாம்.....
வ: காண்டீபமே பரவாயில்லை....சொரணையற்ற ஜென்மம் எம். எல். ஏ.,என்று எழுதிற்று, கல்கியின் கர்வத்தைப் பாரேம்பா, கொள்ளைக்காரன் என்றே எழுதுது.....
ஜ: (பீமாராவைக் கோபமாகப் பார்த்து) கல்கியும், காண்டீபமும் இப்படி, எங்க மானம், போகிறபடி எழுதி இருக்கு, இதோ இவர் இருக்கிறாரே, பீரங்கி, இவர் சொல்றாரு, பணம் கொடு, நான் உங்களைத் திட்டுகிற திராவிடத்தானுங்களைத் தீர்த்துக் கட்டிவிடறேன்னு.
வ: திராவிடத்தானுங்க, வேறே கட்சி வேறே இலட்சியம்—இருந்தும், சோம்பேறி மந்திரிகள், சொரணை கெட்ட எம். எல். ஏ.க்கள் என்றெல்லாம் சொல்றது இல்லையே......
ஐ: சொந்தக் கட்சிப் பத்திரிகை......இந்த இலட்சணத்திலே இருக்கு.....இதை என்ன மகாநாடு போட்டு தடுக்கப் போறே, பீமு.
த: 17—6—51லே எழுதி இருக்கு.....அது சரி...என்னமோ வயத்தெரிச்சலிலே, எழுதியிருக்கு, எதையோ எழுதித் தொலைக்கட்டும், இந்த எழுத்தெல்லாம் நம்மை அசைக்காது, ஆனா இதைப்போல விசாரணை எதாவது நடக்குமா...?
ஜ: விசாரணையாவது மண்ணாவது.....
ச: ஏன் வீணா விசாரப்படணும்—கல்கி ஹாஸ்ய பத்திரிகை—வேடிக்கையா ஏதோ எழுதி இருக்கும்.....
ஜ: நல்லா இருக்கு சாமி! உங்க நியாயம்! சொரணை கெட்டவன், துடு இல்லாதவன், அகப்பட்டதைச் சுருட்டறவன், என்றெல்லாம் எழுதுவது, விகடமா......
வ: அவர் வேற எப்படிச் சொல்லுவார் அப்பா! அவர் தானே நம்ம ஊருக்கு, கல்கி ஏஜண்ட்.
ஜ: புரியுது, ஐயரோட போக்கு....
த: இது மட்டுமில்லை.....அடுத்த எலக்க்ஷனிலே, இப்ப இருக்கிற எம். எல். ஏ.க்களை தேர்தலுக்கு நிறுத்தக் கூடாதாம்.
ஜ: யார் யோசனை இது?
142