உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காம: சுத்த ஏமாளியா இருக்கறயே, நம்ம ஆளுகளுக்கு விளக்கமாகச் சொன்னா, பெரியவரோட கட்சி ஆட்கள் விசாரப் படமாட்டாங்களா.....என்னடா இது, பெரியவரு காமராஜர்கூட நேசமா இருப்பது, ஆராய்ந்து பார்த்தா, நம்மோட கொள்கைக்கே ஆபத்தாத்தான் இருக்குது, காங்கிரசுக்குத்தான் அந்தச் சினேகிதத்தாலே, இலாபம் பலவிதத்திலேயும் இருக்குதுன்னு தெரிஞ்சி, சங்கடப்படமாட்டாங்களா......?

ஊழி: ஆமாங்க...... அதுவும் உண்மைதான்.

காம: அதனாலேதான், இப்படி உன்னைப்போல, தனியா வந்து. பார்க்கிறவங்களிடம் நான், விளக்கம் சொல்றேன். தேர்தல் முடிகிற வரையிலே, நாம இந்த! 'கறவைப் பசுவை' விடப்படாது ஐயா, விடப்படாது......ஆமா! நான் காரணமில்லாமலே, சினேகிதம் செய்து கொண்டிருப்பனா! கெண்டையை வீசினா, விரால் கிடைக்கும்னு, நம்பு. பெரியவரே, எழுதியிருக்காரு, காமராஜர் எப்பவும் காங்கிரஸ் 'பக்தர்'னு தெரியுதா.......

ஊழி: உங்களோட காங்கிரஸ் 'பக்தி' எங்களுக்குத் தெரியாததுங்களா......

காம: 'பக்தி' மட்டுமல்லய்யா......'யுக்தி' இருக்குது, அதையும் தெரிஞ்சிக்க வேணும்......தெரியுதா.......

ஊழி: உங்களோட பக்தியும் யுக்தியும், யாருக்கு வரும்.......இனி நான் சும்மா இருக்கப்போறதில்லைங்க.....ஆமா, கிராமம் கிராமமாக இதைச் சொல்லி வைப்பேன்......

காம: இரு, இரு.....வெளிப்படையாகச் சொல்லிக் காரியத்தைக் கெடுத்துவிடாதே......ஆமா.....இந்த ஐந்தாண்டுத் திட்டத்துக்கு ஒரு நாடகக் கோஷ்டி ஏற்படுத்த முடியுமா......உன்னாலே......

ஊழி: நீங்க உத்தரவிட்டா செய்து முடிச்சுடறேன்.......இதுக்கு என்னங்க கஷ்டம்....

காம: செய்துபாரு, யோசனை. அடுத்த மாசம், முடிக்கலாம்.

ஊழி: நம்ம பக்கத்திலே, ஒரு மகாநாடு போடணுமுங்க, எலக்க்ஷனுக்கு முந்தி.

காம: போட்டாப்போச்சி, அதுக்கென்ன.

ஊழி: இந்திராகாந்தி வருவாங்களான்னு, கேட்கறாங்க.

காம: அடெடே! காங்கிரஸ் மகாநாடு போட உத்தேசமா?

160