தம்பிங்க...தகனம் செய்தூட்ட பிறகு, இழுத்துக்கிட்டுப்போங்க...உங்கக் காலைக் கும்பிடறேன்...ஐயா! நீங்கி பிள்ளே குட்டியைப் பெத்தவங்கதானே.
வே: ஐயாவுங்களே நானும் கும்படறேன்.
போ: அதெல்லாம் ஸ்டேஷன் போனபிறகு, ஐயாகிட்டச் சொல்லணும். டே! ராஜாக்கண்ணு! புறப்படு.
வீ: ஐயா! கொஞ்சம் ஈவு இரக்கம் காட்டுங்களய்யா! தம்பி பிணத்தைப் போட்டுட்டு எப்படிய்யா, அண்ணன்காரன் வருவான்.
ரா: அம்மா, அழாதே! இரக்கம் இரக்கம் என்று ஏனம்மா இல்லாத ஒன்றைக் கேட்கிறாய். டாக்டரைக் கேட்டாயே இருந்ததா? எஜமானரை அப்பா கேட்டாரே, இருந்ததா? பைத்தியம் உனக்கு.
காட்சி 10
இருப்போர்:—போலீசார், ராஜாக்கண்ணு.
போ 34: என்னமோ போண்ணேன்! எனக்கென்னமோ வர வர இந்த வேலையே பிடிக்கலே. அதிலேயும் இந்தமாதிரி சமயத்திலே ரொம்பக் கண்றாவியா இருக்கு.
போ 48: அதைப் பாத்தா முடியுமா 34? டியூடின்னா டியூட்டிதானே! கண்ணைக் கசக்கினாகூட நாம்ப என்ன செய்யறது—இவன் வீட்லே தம்பி செத்துப் போயிட்டானே, தகனம் செய்றவரை, சும்மா இருக்கட்டும்னு சொல்லத்தான் வேணும்னு தோணுது. நமக்கு மட்டும் இரக்கம் இல்லாமலா போகும்? ஆனா, விட்டா, பய, ஓடிடுவானே, பிறகு நாம்ப சஸ்பெண்டு தானே, ஏம்பா! நம்ம பெண்டு பிள்ளைக் கதி என்ன ஆகும்?
181