உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காட்சி 14

இடம்:—முருகன் வீடு.
இருப்போர்:—முருகேசன், அவன் மனைவி முத்தாயி, மாப்பிள்ளை மற்றும் பெண் பார்க்க வந்தவர்கள் ஆகியோர்.

தலைமை குடியானவன்: முருகேசா இந்தாப்பா இரத்தின ஜமுக்காளம்.

முரு: எதுக்குங்க.

த.குடி: வர்ர மனுசாளை மரியாதை செய்து அனுப்பணும் பாரு. முருகேசா, வாரவுங்க யாரு?

முரு: மாப்பிள்ளையோட தம்பியும், தங்கச்சியும் வர்ராங்க.

த.குடி: இன்னும் வேரேதாவது வேணுமா?

முரு: வேண்டாமுங்க.

த.குடி: சிலவுக்கு ஏதாவது வேணுமா?

முரு: இருக்குதுங்க. பத்து ரூபாய் இருக்குது.

த.குடி: அப்போ நான் வரட்டுமா?

முரு: சரிங்க. ஏ பிள்ளை முத்தாயி, குழந்தையை கூப்பிடு. தலை கிலை சீவி, பொட்டு கிட்டு வச்சு.....அடடே, அவுங்களே வந்துட்டாங்க பிள்ளை நம்ப வீட்டிலே எல்லோரும் சௌக்கியம் தானுங்களே?

மாப்பிள்ளை தம்பி: சௌக்கியம் தானுங்க.

முத்தாயி: விருந்தாளிகள் வந்துட்டாலே கால் ஓடமாட்டேங்குது கை ஓடமாட்டேங்குது.

முரு: உட்காருங்க, பரவாயில்லை. உட்காருங்க இது உங்க வீடுமாதிரி நினைச்சுக்கங்க.

மா. தம்பி: நம்ப வீட்டிலேயும் எல்லோரும் சௌக்கியம் தானுங்க.

முரு: சௌக்கியந்தான்.......வெத்திலை போடுங்க.

மா. தம்பி: அதுக்கென்ன போட்டாப் போகுது, தட்டை காணோமுங்களே.

26

201