உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மணி: ரொம்ப தாங்ஸ். நீ யாரம்மா?

பாக்: இந்த வீட்டிலேதான் மூணு வருஷமாக வேலை பார்த்துக்கிட்டு வர்ரேனுங்க.

மணி: ஓ.ஐ.சி. உன் பெயரென்ன?

பாக்: பாக்கியம்.

மணி: பியூட்டிபுல் நேம் (Beautiful Name).

பாக்: என்னங்க, டீ பார்ட்டியிலே ஒரு டான்ஸ்......

மணி: பேஷா வைப்போம்.

பாக்: அதிலே ஜமீன்தாரின் மகள் சரசாவே வந்து ஆடினால் ரெம்ப நல்லாயிருக்கும்.

மணி: அதுக்கென்ன பிரமாதம் அப்படியே செய்துவிடுவோம்.\

பாக்: அப்ப நான் போயிட்டு வரட்டுங்களா,

மணி: போறியா?......ஹும்.......போறையா?

காட்சி 24

இடம்:—வேதாசல முதலியார் வீடு.
இருப்போர்:—வேதாசலம், சொக்கன்.


[வேதாசல முதலியார் அழைப்பிதழைப் படிக்கிறார்.]

வே: ஐயா, நான் அயல்நாடு சென்று, சுகமே திரும்பியதை முன்னிட்டு நிகழும் கார்த்திகை மாதம் 2-ம் தேதி சனிக்கிழமையன்று என் இல்லத்தில் நடக்கும் தேநீர் விருந்துக்கு தாங்கள் தங்கள் குடும்ப சகிதமாய் வந்து என்னை ஆசீர்வதிக்க வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, பரமானந்தன், மேவார் விலாசம்.

சொ: போகவேண்டியதானுங்களே, டீ பார்ட்டிக்கு.

வே: சீ, கழுதை உன்னை ஆருடமா கேட்டேன்?

219