உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காட்சி 40

இடம்:—மதராஸ் நண்பர்களின் அறையில் மூர்த்தி.
இருப்போர்:—மூர்த்தி, மற்றும் அவர் நண்பர்கள்.

1-வது நண்பன்: மூர்த்தி, ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் பண்ணிக்கனும் பாதரை (Father) வேறே கோவிச்சிக்கிட்டு வந்திருக்கிற இதெல்லாம் என்கிரேஜ் (Encourage) பண்ண முடியாது.

நண்பன் 2: மூர்த்தி, என்னமோ விபரீத காரியம் செய்யுறே. முடியாதுன்னா முடியாதுதான்.

நண்பன் 3: என்னைத் தொந்தரவு படுத்தாதே மூர்த்தி, இல்லைன்னா இல்லைதான்.

இல்லை. இல்லை. இல்லை. இல்லை.

[இல்லையென்ற பதிலுடன் திரும்பிய மூர்த்தி அவன் கழுத்திலிருக்கும் பொன் ஜெயின் ஞாபகத்திற்கு வரவே அதை மார்வாடிக் கடையில் விற்று ரூபாய் 30 பெற்றுக்கொண்டு எங்கேயாவது அமிர்தத்துடன் காதல் வாழ்க்கை நடத்தலாம் என்ற எண்ணத்துடன் சொந்த ஊருக்குத் திரும்புகிறான்.]

மூர்த்தி: ஐயா! இங்கிருந்த முருகேச நாயக்கர் வீடு என்னவாயிற்று?

ஒருவன்: அதெல்லாம் எரிஞ்சி சாம்பலா போயிடுச்சிங்க?

மூர்த்தி: அவர் மகள் அமிர்தம்?

ஒருவர்: அந்த அம்மாளும் எரிஞ்சி சாம்பலா போயிட்டாங்க.

246