உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மணி: நல்ல மாமனாருண்ணா கோவம்மில்லே வந்திருக்கணும்?

வே: கோவம் வராமலா இருக்கு.

மணி: எங்கேய்யா வந்தது கோபம்? இல்ல—தெரியாமத்தான் கேக்கிறேன். எங்க வந்தது கோவம்? கோவம் வந்திருந்தா அப்பவே கன்னத்திலே இரண்டு அறை கொடுத்து கேட்டிருக்க மாட்டேளா?

வே: இவ்வளவு பெரிய பிள்ளையை நான் அடிச்சித் திருத்தணுமா?

மணி: என்னது, பரமுவையா அடிக்கச் சொன்னேன்? ஆளப்பாரு! குடியன், வெறியன் அப்படி இப்படிண்ணு திட்றானே அவனையல்ல கன்னத்திலே ஒரு அறை கொடுத்து கேட்டிருக்கணும் ஏண்டாப்பா, டேய் ஊரிலே உலகத்திலே நடக்காதது என்னாடா நடந்து போச்சுது புதுசா. குடிக்கிறான், குடிக்கிறான்னு சொல்றாயே. யார் வீட்டுக் காசு, உம். அறைஞ்சன்னா.

வே: டேய்....டேய்....யாரைடா....?

மணி: ஹும்...உங்களையல்ல. அந்த மாதிரி நீங்க கேட்டிருந்தீங்கன்னா சரியான மாமனாருதான்.

பர: அப்படிக்கேள் மணி, அந்த மரமண்டையில் ஏர்ற வரைக்கும் கேள்!

வே: உங்க ஞாயம் இருக்கே...! நான் ஒரு மடையன்.

மணி: இப்ப சொன்னீங்களே அது சரியான......வார்த்தை!

பர: மணி, அங்கேன்னப்பா பேச்சு. நான் குடிக்காரன், சூதாடி, கூத்திக்கள்ளன் இவ்வளவுதானே. இதைப் பற்றி இந்த ஆசாமி இன்னும் பேசினா நான் கொலைகாரனாக வேண்டியதுதான்! தீர்மானமாய் சொல்லிப்புடு அதை.

வே: அடபாவி! இவ்வளவு தூரத்துக்கு வந்துட்டதா? குடியைக் கெடுத்து, சொத்தை பாழாக்கி, என் மானத்தையும் வாங்கிட்டே. இனிமே அது ஒன்றுதானே பாக்கி? அதையும் நடத்திடு...? நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தா.....

மணி: அது லொள் லொள்ன்னு கொலைக்கும்.

248