வே: டேய், இனிமே, ஏதாவது பேசினீங்க உதைதான் விழும். வீட்டை விட்டுப் போங்கடா கழுதைகளா.
பர: மணி.....பயித்தியம்.....கழுதையாம்.
மணி: யாரையா கழுதை? (வேதாசலத்தை அடிக்கிறான்)
வே: டேய்......டேய்......
சரசா: அப்பா......! அப்பா ......!!
பர: என்னடி வேஷம் போடறே. மானம் போகுதோ? நடடி வெளியே!
காட்சி 43
இருப்போர்:—ஹரிகரதாஸ், சுந்தரகோஷ், மூர்த்தி.
ஹரிகரதாஸ்: இன்று மந்திராலோசனை சபைக்கு வர ஏன் இவ்வளவு தாமதம்?
சுந்தரகோஷ்: உமது சீட கோடிகள் நித்ரா தேவியுடன் விளையாட இவ்வளவு நேரமாயிற்று. இந்த தொல்லைக்காக வேறே எங்கேயாவது போய்விடலாமென்றால் கேட்டால்தானே.
ஹரிகர: கரும்புத் தோட்டத்தைவிட்டு காடுமேடு சுற்றுவதா பேதமை. சுந்தரி பேதமை நமக்கு இங்கு என்ன குறை? பரலோக உபதேசம் செய்ய பூ; தர்ப்பணத்துக்கு பக்தர்கள்; சிருங்கார கனிரசம் தர நீ. ஆஸ்ரமம் அமைத்துக் கொள்ளா விட்டால் இந்த ஆனந்தம் ஏதடி, இந்த ஆனந்தம்? கிளியே! மோகனாங்கியே!, துள்ளும் மதவேள் கணையாலே, தொல்லை மிக அடைந்தேன் பகலாலே. வா, நாம் இன்ப மாளிகைக்குச் செல்வோம்.
மூர்த்தி: ஹ...! கபட வேஷதாரியே, காமுகா, பகலிலே யோகியாகவும், பாதி ராத்திரியிலே போகியாகவும் காட்சியளிக்கும் பேடிப்பயலே! ஆசிரமமா இது? மோட்ச சாம்ராஜ்யத்திற்கு பயிற்சி கூடமா? பரமனின் பாதார விந்தைக்கு
250