பாருங்கள், அவரது பெற்றோரை. (திரையைத் தள்ளி காண்பிக்கிறான்.)
மூர்த்தி: என் அமிர்தமா சுகிர்தம்?
பாலு: ஒன்று சொல்ல மறந்துட்டேன். அமிர்தம் தான் சுகிர்தம்! என் வளர்ப்பு பொண்ணு.
ஆன: ஆம், உமது மருமகள் யார்? வேலைக்காரி அமிர்தம், வேற்று ஜாதிப் பெண். எங்கே உன் ஜாதித்திமிர்? பணம் பத்து நாளில் ஜாதியை பட்சணமாக்கி விட்டது பார்த்தீரா? பணத்திமிர் ஒழிந்தது ஜாதித் திமிரும் ஒழிந்தது. என் வேலையும் முடிந்தது. நான் வருகிறேன்.
சரசா: நில்லுங்கள். நீங்கள் இல்லாத இந்த வீட்டில் எனக்கு என்ன வேலை? நானும் தங்களுடன் வரவேண்டியது தான்.
மூர்த்தி: ஆம், ஆனந்தன் இல்லாத இடத்தில் இனி யாருக்கும் இடமில்லை. அவர் போகும் உலகம்தான் எனக்கும்.
அமிர்: நீங்கள் போய் விட்டால் எனக்கு மட்டும் இந்த வீட்டில் என்ன வேலை? நானும் உங்களுடன் வர வேண்டியவள் தான்.
வே: நில்லுங்கள்! யாரும் எங்கேயும் போக வேண்டாம். உங்களுக்கு வேறு உலகம், எனக்கு வேறு உலகமில்லை. ஆனந்தா வா! சரசா இந்தப் பாதகனை நல்வழிப் படுத்திய உன் புருஷன் ஆனந்தனோடு ஆனந்தமாக வாழ்ந்திரு! அமிர்தம் பலே! நீ பெரிய வேலைக்காரி தான். காதலால் ஜாதியை வென்ற உத்தமி. உன் புருஷன் மூர்த்தியோடு சுகமாக வாழ்ந்திரு! பாலு முதலியாரே, வாரும், புறப்படுவோம்!
பாலு: எங்கே?
வே: பணத் திமிரும் ஜாதித் திமிரும் ஒழிய வேண்டும் என்றும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும் நாட்டு மக்களுக்கு உரைப்போம்.
"ஒன்றே குலம்! ஒருவனே தேவன்"