இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மடாலயத்தை அடுத்த ஒரு விடுதி
[நெற்றியில் பொட்டிட்டுக் கொண்டிருக்கிறாள், எழில் உள்ளமாது. கட்டிலின் மீது கந்தபூபதி உட்கார்ந்திருக்கிறான்.]
கந்த: சொக்கிவிடுவான், சித்ரா!...சொர்ணாபிஷேகம் உனக்கு.......
சி: சகிக்காது அவன் நடை உடை பாவனை......
கந்த: சித்ரா! உன் சாமர்த்யத்தைத்தான் நாங்கள் சகலரும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
சி: எனக்கு அதிகம் சொல்ல வேண்டுமா....
[மோகப் பார்வை காட்டி.]
சி: எப்படி......!
கந்த: (பரவசமாகி ) சித்ரா......
சி: குருநாதருக்குத் துரோகம் எண்ணலாமா....(குறும்பாக)
கந்த: (தாவிச் சென்று சித்ராவின் கரத்தைப் பிடித்திழுத்து அருகே நெருங்கியபடி) சித்ரா......!
சி: (அவன் முதுகைத் தட்டி) பைத்யமே! சித்ரா சித்ரா என்று ஜெபம் செய்து கொண்டிருந்தால் போதுமா....நேரமாகிறதே.....!
வசந்த மண்டபம்
[மடாலயத் தோட்ட வசந்த மண்டபத்தில் உலாவிக் கொண்டே.]
மடா: சித்ரா...
[தோட்டப் பாதையில் கந்த பூபதியும் சித்ராவும்]
கந்த: (மெல்லிய குரலில்) சித்ரா....இரண்டு பகல் இரண்டு இரவு...ஆசாமி, தேனில் வீழ்ந்த ஈயாக வேண்டும்...
[சித்ரா தலை அசைக்கிறாள்]
303