உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

[அவளை அணைத்துக்கொள்ள ஆவலாகச் செல்கிறார். அவள் இலாவகமாக அவரை விட்டு விலகியபடி, கோப்பையைத் தருகிறாள். பழரசத்தைப் பருகுகிறார், சித்ராவைப் பார்த்தவண்ணம்

சைவ வேடச் சின்னங்களான உருத்திராட்சமாலை முதலியனவற்றை மடாதிபதி கழற்றி ஒரு புறத்தில் தட்டிலே வைக்கிறார்]

மடாலய உள் கூடம்

[மடாலயத்தின் வேறோர் பக்கம், பல தட்டுகளிலே பழவகைகளைப் பணியாட்கள் ஒழுங்காக அடுக்கி வைக்கிறார்கள். பெரிய மாலைகள்—உதிரிமலர்கள் கூடைகளிலே வைக்கப்படுகின்றன. விபூதி மடலில் விபூதியைக் கொட்டி அதிலே பன்னீர் தெளிக்கிறார்கள். மணிகளைத் துடைத்து வைக்கிறார்கள். மயில் விசிறிகளை எடுத்து வைக்கிறார்கள்.

பணியாட்கள் வேலை செய்து கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.]

ஒரு. பணியாள்: பாழாப்போன பவனி உற்சவம் நம்ம உயிரிலே பாதியைப் போக்கி விடும்—எவ்வளவு வேலை, எவ்வளவு வேலை.....

மற். பணி: நரம்பு முறிய நாம்ப பாடுபட்டானதும் மாப்பிள்ளை மாதிரியா அவர் பல்லக்கிலே ஏறிகிட்டு பவனி வருவாரு......

ஒரு பணி: விவரம் தெரியாத கும்பல், அவர் நேரே கைலாயத்திலிருந்து வந்தார்னு பேசிகிட்டுக் கீழே விழுந்து விழுந்து கும்பிட்டுவிட்டுக் கூத்தாடப் போவுதுங்க......

[விபூதி மடல் கை தவறிச் சாய்கிறது விபூதி கீழ கொட்டிவிட, அதை ஒரு புறம் கூட்டித் தள்ளிக்கொண்டே.]

மற் பணி: இதுக்கு என்ன தவியாத்தவிக்கிறாங்க.

39

305