உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காட்சி 4

இடம்:—மாளிகை மாடிக் கூடம்.

இருப்போர்:—சிங்காரவேலர், கணக்கெழுதுவோர்.

நிலைமை:—சிங்காரவேலர், காலைக் கடனை முடித்துவிட்டு, பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறார். வேலையாள், தயங்கித் தயங்கிவந்து நிற்கிறான். என்னடா என்று கேட்பதுபோல அவனைப் பார்க்கிறார்.

வேலையாள்: ஐயாவைப் பார்க்க வேணும்னு ஒரு பொண்ணு......

சிங்காரவேலர்: (வியப்படைந்து) என்னைப் பார்க்கவா.....பொண்ணா.....யார்டா அது.

[கீழே இறங்கிப் போகிறார்.]

கூடத்தில் இருபத்தைந்து வயதுள்ள பெண், நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.

முகத்தில் பவுடரும், உதட்டில் சாயமும், காலில் பூட்சும் இருக்கிறது.

சிங்காரவேலரைப் பார்த்ததும், பயந்து எழுந்து நின்று கும்பிடுகிறாள்.

[சோபாவில் உட்காருகிறார்.]

சி: யார் நீ? யாரைப் பார்க்கணும்....

பெண்: இந்த வீட்டுக்கார ஐயாவைத்தான்....

சி: அது நான் தான்....என்ன விஷயமா.....என்னைப் பார்க்க...

பெ: உங்களைப் பார்க்க இல்லிங்க. இந்த வீட்டுக்கார ஐயா......வேறே ஒருவர் வாலிபமா......

சி: (புன்சிரிப்புடன்) நம்ம மகன்தான்.....கண்ணாயிரம்.....

பெ: அவரைத்தானுங்க.....அவசரமாப் பார்க்கணும்.....

சி: நீ யாரு? அவனை எப்படித் தெரியும்? அவனிடம் என்ன பேச்சு?

பெ: (வெட்கத்துடன்) அவரோட அப்பான்னு சொல்லி விட்டிங்க...... நான் எப்படிங்க விவரமெல்லாம் சொல்றது.....நான் அவரிடமே பேசிக்கொள்றேன்....

42

329