நாடியா! ஓடியா! ஓடியா! நாடியா! பாட்டு அப்ப! இப்ப நான் அவளைப் பார்த்ததே கிடையாதே.....
சி: (கோபத்துடன்) போதும் உன் பேச்சை நிறுத்திக் கொள்ளு. ஐம்பது ரூபாயா வேணும்......
பெ: தரனுமல்ல, இனாமல்ல.....என் பையிலே இருந்த பணம்......
சி: (சலிப்புடன்) போடா, போய் ஐம்பது கொண்டா, அலமாரியிலே இருக்குது.
பெ: (கண்டிப்புடன்) மேலே ஒரு அஞ்சு கொண்டுவாங்க சார்! பை வாங்க....பெரிய மனிதர்களாம், பெரிய மனிதர்கள்!எதிலேன்னுதான் தெரியல்லே. நாங்க வயத்துச் சோத்துக்கு வேறே வழி இல்லாததாலே கெட்டு அலையறோம். கொட்டிக் கிடக்குதே பணம், குணம் பாரு எப்படி இருக்குதுன்னு.....
சி: வாயை மூடிக்கிட்டுக் கிட.....
பெ: (குத்தலாக) கொஞ்சம் பேசேன், கொஞ்சம் பேசேன்னு கூத்தாடினான் உன் மகன் ராத்திரி....
சி: கண்ணாயிரம்! நல்லா இருக்குதா நீ செய்த காரியம். ஊர் மெச்ச வாழற குடும்பம்டா இது....நம்மைப் பார்த்து மற்றவங்க, நீதி, நியாயம், அன்பு பண்பு இதையெல்லாம் தெரிந்து கொள்ளணும். அந்த அர்த்தத்திலேதான் நம்ம இடத்தைப் பெரிய இடம்னு ஊரார் சொல்றாங்க. நீ செய்த இந்தக் காரியம், நினைத்தாலே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம்......அப்படி பட்ட காரியம். யாரு செய்கிற காரியம் இதெல்லாம். வக்கு வழியத்ததுக கண்டபடி திரியும், கண்டவளோடு சேர்ந்து கூத்தாடும். அதுகளுக்கு நல்லது கெட்டது தெரியாது. மான அவமானத்தைப்பத்தின அக்கறை இருக்காது. எப்படி நடந்தாலும் யாரும் எதுவும் கேட்கமாட்டாங்க. நாம அப்படியா? நமக்கு அடுக்குமடா கண்ணாயிரம், இப்படிப்பட்ட காரியம்......
332