உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
[கண்ணாயிரம் மேலும் திடுக்கிடுகிறான். உண்மையைக் கூறினால், நாடியாவுக்கும் தனக்கும் உள்ள தொடர்புகூட அம்பலமாகிவிடும். கேவலம் என்ற எண்ணம் தோன்றுகிறது. இரக்க உணர்ச்சியையும் நேர்மையையும் துரத்தி அடிக்கிறது.]

சப்: இது ஒரு நாட்டியக்காரியுடையது.

சி: (வக்கீல் போல விளக்கமாக) நாட்டியக்காரியுடைய பைக்கும் என் மகனுக்கும் என்ன சம்பந்தம்! வரவர, நானும் பார்க்கறேனுங்க, வயத்துச் சோத்துக்கு வழியத்ததுகளெல்லாம் பழி பாவத்துக்கு அஞ்சாமத்தான் பொய் பேசுதுங்க...

சப்: கருப்பன் கோர்ட்டிலேயே சொல்லப் போகிறேன் இந்தப் பை விஷயம் என்று மிரட்டுகிறான்....எதை வேணுமானாலும் சொல்லு...காணாமல் போன பொருள் உன் வீட்டிலே இருந்தது......உன் மனைவி அந்த வீட்டிலே வேலை செய்கிற..... இந்த இரண்டும் போதும் எங்களுக்கு என்று சொன்னேன்...

சி: பய பெட்டிப் பாம்பாகி விட்டிருப்பான்.

சப்: இல்லிங்க, நான் பை விஷயமாச் சொல்லத்தான் போகிறேன் என்கிறான்.

சி: (ஏதும் அறியாதவர் போல) நம்ம வீட்டு கடியாரம் களவு போனதற்கும் இந்தப் பைக்கும் என்ன சம்பந்தம். நீங்க இதை ஒரு அயிட்டமாகவே சேர்த்துக் கொள்ளத் தேவையில்லையே...

சப்: இதுவும் கருப்பன் வீட்டிலேதானே கிடைச்சது. அதனாலே, இதைப்பத்தின பேச்சும் வரத்தானே செய்யும்...

சி: (கவலையை மறைத்தபடி) வராமலிருந்தா நல்லதுன்னு பார்க்கறேன்...

சப்: கோர்ட்டோட விருப்பம் அதெல்லாம்...

சி: (சிறிது குழைவாக) நீங்க நினைச்சா இது விஷயமா கோர்ட்டிலே எந்தப் பேச்சும் கிளம்பாதபடி செய்ய முடியாதா என்ன! அது கிடக்கட்டங்க.....நீங்க பசுமாடு வேணும்னு கேட்டிங்களாமே...

சப்: ஒரு நூறு நூற்றைம்பது ரூபா விலையிலே வேணும்...

சி: நான் நாளைக்கு அனுப்பி வைக்கறேன்.

சப்: (குத்தலாக) புரியதுங்க......அதுக்கு வேறே ஆளைப் பாருங்க, நானும் வேறே பசு பார்த்துக் கொள்றேன்...

341