வந்தவர்: கோர்ட்டிலே நான் பார்த்துக்கொள்கிறேன், அந்த நாட்டியக்காரி விஷயம்...?
சி: நான் பார்த்துக் கொள்கிறேன்.
வ: தம்பியைக் கூப்பிடுங்க......சில 'பாயிண்ட்' சொல்லிவிட்டுப் போகிறேன்.
வ: உட்கார் தம்பி...
சி: சரி....சரி....உட்கார்......
வ: தம்பி! அந்தப் பை விஷயம் இருக்கிறதே அதை அந்தப் பயல் பெரிசு படுத்தப் பார்க்கிறான். நாமும் கொஞ்சம் முன்ஜாக்ரதையாக இருக்கவேண்டும்.
வ: இந்தப் பை யாருடையது?
க: எனக்குத் தெரியாது.
வ: இதை இதற்குமுன் எப்போதாவது பார்த்ததுண்டா?
க: இல்லை.
வ: நாட்டியக்காரி நாடியாவை உனக்குத் தெரியுமா?
க: தெரியாது.
வ: பார்த்ததுண்டா?
க: இல்லை!
வ: இதை நாட்டியக்காரி நாடியாவிடமிருந்து நீ பறித்துக் கொண்டதாகக் கருப்பன் கூறுகிறானே அதற்கு என்ன சொல்லுகிறாய்?
க: பச்சைப் புளுகு!
வ: இந்தப் பையையும் கடியாரத்தையும் நீயே கொடுத்ததாகக் கருப்பன் கூறுகிறானே அதற்கு என்ன சொல்லுகிறாய்?
க: அண்டப் புளுகு!
வ: இவ்வளவுதான்! அழுத்தந்திருத்தமாக, தயங்காமல், இப்படி கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டும். பயம் துளியும் வேண்டாம். நான் அங்குதானே இருப்பேன், என்ன?
343