உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி: கொஞ்சமென்ன! நல்லாவே (குத்தலாக ) பேசறா...

அ: அது சிலருக்குப் பிடிக்கும்...பேச்சு...ஆனா நாட்டியமும் தெரியாது, நல்ல சுபாவமும் கிடையாது...நான் சொன்னேன் பாருங்க, சிட்டு அது இந்த மாதிரி இடத்துக்குப் பொருத்தம். பார்த்தா நீங்களே 'சபாஷ்' போடுவிங்க...

சி: கர்மம்! கர்மம்! நாட்டியத்துக்கு அல்ல அய்யா. இது ஒரு கோர்ட் விவகாரம். அந்தப் பொண்ணு இருக்காளே நாடியா, அவ சாட்சி சொல்லணும் நம்ம பக்கம்...முடியுமா உன்னாலே, சரிப்படுத்த.

அ: (யோசித்தபடி) கொஞ்சம் கஷ்டம்தானுங்க, பிடிவாதக்காரி.

சி: செலவு பற்றிய கவலை வேண்டாம்.

அவ: பார்ப்போம்ங்க.....இங்கே அழைத்துக்கொண்டு வரட்டுமா...அல்லது நீங்களே அங்கே வாரிங்களா?

சி: இரண்டும் வேண்டாம். நீயே பேசி, அதாவது நீயே அவளுக்கு புத்தி சொல்வது போலப் பேசி, நம்ம பக்கம் சாட்சி சொல்ல சம்மதிக்கவைக்கணும். அதெல்லாம் பெரிய இடம். அந்த இடத்துப் பகையெல்லாம் கூடாது, பல மாதிரி தொல்லையெல்லாம் வரும்... அதனாலே அவர்களுக்கு விரோதமாக சாட்சி சொல்லி ஆபத்திலே மாட்டிக்கொள்ளாதே...அவர்கள் பக்கம் சாட்சி சொன்னா பணமும் கிடைக்கும், ஆதரவும் தருவாங்க, அப்படி இப்படின்னு சொல்லணும். ஏன்யா, இதையெல்லாமா விளக்கவேணும். நீ என்ன அனுபவமில்லாத ஆளா...

அவ: கோர்ட் விவகாரமான அனுபவம் ஏதுங்க, பார்க்கிறேனுங்க. என்னாலே முடிந்ததை...

[சிங்காரவேலர் பணம் தருகிறார். பெற்றுக் கொண்டு போகிறான்.]

காட்சி 7

இடம்:—நாடியா வீடு.

இருப்போர்:—நாடியா, மூதாட்டி.

நிலைமை:—மூதாட்டி இழுத்துப் போர்த்துக்கொண்டு படுத்துக்கொண்டிருக்கிறாள். நாடியா, ஒரு பழய ஆர்மோனியத்தை வாசித்துக் கொண்டிருக்கிறாள்.

44

345