பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சு: இவ்வளவு அழகான நிலவில், உனக்குக் களவாளப் போகலாம் என்று புத்தி பிறந்ததே தவிர, வேடிக்கையாக உலாவலாம், ஆனந்தமாகப் பாடலாம் என்று தோன்றவில்லை. ஏன்? காதல் என்றால்தான் தெரியாது என்கிறாயே!

9

நான் போகிறேன். நீ ஏதேதோ பேசுகிறாய். உன்னைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. பயமாகவும் இருக்கிறது. சு: நேற்று நீ வந்திருந்தால் நானும் கூடத்தான் பயந்து போயிருப்பேன். இன்று உண்மையிலேயே பரிதாபப்படு கிறேன். ஏன் தெரியுமோ? நீ உன் முழுத் திறமையைக் காட்டினாலும் என்னை என்ன செய்ய முடியும் ? சாகடிக்க முடியும். நான்தான் சாகத் துணிந்துவிட்டேனே ! இனிப் பயம் என்ன? சுடு இஷ்டமிருந்தால். 'க: இல்லை! நான் போகிறேன். ஏதோ சதி நாடகமாடு கிறாய். என்னை ஏய்க்கப் பார்க்கிறாய். நான் கீழே இறங்கிப் போகும்போது கூச்சலிட்டு என்னைச் சிக்கவைக்கலாம் என்று பார்க்கிறாய். நான் ஏமாறமாட்டேன். அப்படியே அந்த நாற்காலியில் உட்கார். க: உன் வாயில் துணி அடைத்து.. சு வழக்கமாக நடப்பதுதான். வாயில் துணி அடைத்து என்னை நாற்காலியோடு சேர்த்துக் கட்டிவிடப் போகிறாய்.. அது தானே ! க: ஆமாம்......கூச்சலிட்டால்...... சு: பயப்படாதே! இது பெரிய மாளிகை. ஒருதரம் இரண்டு தரம் கூச்சலிட்டால் கீழே கேட்காது. சரி ! நான் கூச்சலிட்டால் கொன்றுவிடுவாய். பைத்தியக்காரா! கொலை! தற்கொலை! இரண்டிலே எதுவாக இருந்தால் என்ன? இப்போது நான் சாக வேண்டும். அவ்வளவுதான். [சுசிலாவின் கண்களிலே கொஞ்சம் நீர் பெருகுவது கண்டு} க: கண்களிலே நீர்...... அப்பா! உனக்கு அக்கா, தங்கை, யாராவது. இருக் கிறார்களா? க! ('இல்லை' என்று தெரிவிக்கத் தலையை அசைக்கிறான்,)

31

31