பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஜெமீன்தாரர் ஜெகவீரரின் தங்கை பவானியைக் கலியாணம் செய்துக்கொண்டு, கௌரவம் பெற்றேன். அந்த விதவையின் பெயர் சொர்ணம், ஸ்வர்ணா என்றும் பெயர். சே : யார்? மருதூர் மிட்டாதாரரின் வைப்பாட்டியாகச் சில காலம் இருந்தவளா? தே: ஆமாம். அவளை விபசாரியாக்கியவன், நான்தான்! அவள் விதி அது என்று உலகம் கூறும். இந்தச் சண்டாளன் செய்த சதி, சொர்ணத்தை அந்தக் கதிக்கு ஆளாக்கிற்று. சேகர்: நான் என் செல்வத்திலும் சுகத்திலும் மூழ்கிச் சொர்ணத்தை மறந்தே போனேன். அவளோ பலவிதக் கஷ்டம் அனுபவித்துப் பிறகு, மருதூர் மிட்டாதாரரின் வைப்பாட்டி யானாள். எனக்கு அது தெரியாது. நான் ஒரு வேலையாக மிட்டாதாரரைப் பார்க்கச் சென்றேன் மருதூருக்கு. அருமையான விருந்து, உபசாரம் - மிட்டாதாரர் எனக்கு அளித்தார். அன்றிரவு, அவர் ஒரு அவசர காரியமாக வெளியே சென்றார். நான் மிட்டா தாரரின் மாளிகைத் தோட்டத்திலே உலவச் சென்றேன். இன்று போல் அன்றும் நல்ல நிலவு. காட்சி 20 இடம் :- மருதூர் மிட்டா தோட்டம். இருப்போர்: சொர்ணம், தேவர், மிட்டாதாரர். [தோட்டம் - நிலவு-தேவரின் வாலிபப் பருவம்- பாட்டு--சாளரம் திறக்கப்பட்டு ஒரு பெண் பார்க்கிறாள். இருவரும் பார்க்கின்றனர். ஆச்சரியத்துடன்.) தே: (ஆவலுடன் - ஆச்சரியத்துடன்) சொர்ணம்! சொ: தாங்களா? (தேவர் கரங்களை நீட்டுகிறார், அவளை அழைக்கும் பாவனையில். ஒருகணம், தேவர் தனிமை, சாளரத்திலே சொர்ணம் இல்லை.)

40

40