பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

காட்சி 2 இடம்:- ஒரு மாளிகை உட்புறம். இருப்போர்:-பெண், ஆடவன். [ஒரு பெண் அலங்காரம் செய்துக்கொள்கிறாள். அவள் கணவன், மெல்ல ஓசைப்படாமல் வருகிறான். அவள் காணாத சமயமாகப் பார்த்து, தலையில் சூடிக் கொள்ள வைத்திருந்த மல்லிகையை மறைத்து விட்டு, ஏதுமறியாதவன் போலிருந்து விடுகிறான். அவள் மல்லிகையைத் தேடுகிறாள். அவனுடைய குறும்புப் பார்வையிலிருந்து விஷயத்தைத் தெரிந்து கொள்கிறாள்.] அவள்: ஏமாற்றுவதிலே, உங்களுக்கு ஈடு, யாரும் கிடையாது. அவன்: நான் சொன்னபடி வந்துவிட்டேனே, ஏமாற்ற வில்லையே. அவள்: போதும் விளையாட்டு, கொடுங்கள். 'அவன்: ஆஹா! கண்ணே! நானே கொடுக்கவேண்டு மென்றுதான் ஆவலாக இருந்தேன்; நீயே கேட்கும்போது என் ஆனந்தம் இரட்டிப்பு அல்லவா ஆகும். (முத்தமிடச் செல்கிறான்) அவள்: நான், இதுவா கேட்டேன்? அவன்: வேறு எதைக் கேட்டாய்? அவள்: மல்லி, அவன்: வாங்கி வரவில்லையே. அவள்: (அவன் கன்னத்தில் வேடிக்கையாக இடித்து ) கொடுங்கள், எப்போதும் விளையாட்டுதான், குழந்தைபோல.

அவன்: (வானத்தைக் காட்டி) அதோ பார், மல்லிகைத் தோட்டம். வா ! மாடிக்கு! (இருவரும் செல்கின்றனர்)

2