பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ர: (சேகரைப் பார்த்து) இவ்வளவுதான் இந்த உலகத்து வீரம்! ஆரம்பத்திலே, வீராவேசமாக இருக்கும். முதல் அடி நம்மதாயிட்டா, பய காலிலே விழுவான். வ: அண்ணேன்! நான் யாரோன்னு பார்த்தேன். உங்க தம்பி அண்ணே நானு. உங்க கையாலே அடிபட்டா எனக்குக் கௌரவந்தாண்ணேன். நாம்ம ரெண்டுபேரும் மாமன் மச்சான் மாதிரி பழகனவங்கதானேண்ணேன். நீங்க பெத்த புள்ளெ மாதிரி அண்ணேன். நம்ம குரு நீங்கதானேண்ணேன். ர்: டாக்டர்? பார்த்திங்களா? நானு அவனுக்கு அண்ணன், மாமன், அப்பன், குரு இவ்வளவு பந்துவுமாயிட்டேன், ஒரே அறை கொடுத்ததிலே. [வந்தவனைப் பார்த்து] போடா! டே! போடா! அவன் தள்ளாடி நடந்துகொண்டே] வ: டே! நம்ம குருகிட்ட எவனாச்சம் வாலாட்டினா, தீத்துப்பூடுவேண்டா, தீத்துப்பூடுவேன். அண்ணேன்! நான் போயிட்டு வர்ரேன். தெரியாம அடிச்சிவிட்டேன். கோபிச் சிக்காதேண்ணேன், [போகிறான்.] ஒரு தடவை டாக்டர், ஒரு டிராமாவிலே, புத்தர் கதை காட்டினாங்க. புத்தரு பெரிய ராஜா பிள்ளே இல்லவா. சுகபோகத்திலேயே இருந்தவரு. ஒருநாள், ஊரைச் சுத்திப் பார்த்தாராம், நோய் பிடிச்சவன், ஏழை, நொண்டி, குருடன், பிணம் இப்படிக் கண்றாவிக் காட்சியாகப் பார்த்தாரு. உடனே அவரு மனமே குழம்பிப்போச்சி. செ! என்னா உலகம்பா இது! இதிலே இவ்வளவு ஆபத்தும் ஆபாசமும் இருக்கான்னு ஆயாசப் பட்டாராம். ஒரு இரவிலே எங்க உலகிலே நடக்கற கோரத்தைக் கண்டா, உங்களாட்டம் இருக்கறவங்களெல்லாம், புத்தர் மனசு பாடுபட்டுதுன்னு டிராமா காட்டினாங்களே அதுபோலே, ஆய்விடுவிங்க. அவ்வளவு கோரம், கொடுமை ஆபாசம் தாண்டவமாடும். சே: ஆமாம் ரத்னம்! பார்த்தாலே வாந்தி வரும்! ஆனா, எல்லாம் எதனாலே வருதுன்னு நினைக்கிறிங்க. ஏழ்மை,படிப்பில்லாமெ இருக்கிறது; நல்லவங்க நமக்கென்னானு போயிடுவது; இதுதான் காரணம். இரண்டு

93

93