பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5

 ஆம் ! ஆயின், ஏக்கம் நமக்கெதற்கு ? அந்நாட்டு சிறப்பினே இந்நாளும் கண்டிடலாம். இவரெலாம் அதற்கே ஒப்படைத்துள்ளார்கள். இவராற்றல் துணை கொண்டு தமிழ் மரபும் தமிழ் மாண்பும் என்றும் ஒளிமயமாய்த் திகழ்ந்திடச் செய்திடலாம் என்றோர் உறுதியினைப் பெறு கின்றேன்; பெற்றிடச் செய்கின்றீர்!

பெரும் புலவர்களாம் நீவிர் ! பட்டமளிப்பு விழாவினிலே பாங்குடனே வந்துள்ள அறிவரசராம் நீவிர். உமக்கென்ன உரைத்திட உளது? உம் உள்ளம் அஃதறியும். உமது பெரும் பேராசிரியர் கருத்து அளித் துள்ளார். என் கடன் நீரறிந்ததனை மீண்டும் நினைவுப் படுத்துவதேயாகும்.

2

பட்டம் பெற்றிடுகின்றீர் ! பல்கலையில் வல்லுநர் ஆகின்றீர், பல்கலைக் கழகம் ஈன்றெடுத்த நன்மணி களாகின்றீர். ஆம் ! ஆயின், இது முடிவா தொடக்கமா ? அஃதே கேள்வி.

பட்டப் பெற்றுள்ளீர், பாராட்டுக்குரியீர். ஐயமில்லை. ஆயின், பட்டம் எதற்கு? காட்டிக் களித்திடவா ? அன்றிப் பணி செய்திடக்கி கடத்திட்ட ஆணையெனக் கொண்டிடவா? நுமக்கா ? நாட்டுக்கா ? பொருள் ஈட்டிடவா ? நாட்டுப் பெரு மையினைக் காத்திடவா ? எதற்கு இப்பட்டம் பயன்பட இருக்கிறது ? அஃதே கேள்வி. விழா தந்திடும் மகிழ்ச்சியுடன் இழைந்து தம் செவி வீழ்ந்திடும் கேள்வி.

தானுண்ட நீரதனைப் பன்மடங்கு பெருக்கிப் பார் மகிழத் தருவதற்கே, சூல்கொண்டுலவுவது மேகம், அறிகின்றோம்.

தன் தோகைதனே விரித்துக் கலாபமயில் ஆடுவது தானே கண்டுகளித்திடவா? இல்லை. பிறர்காண, பிறர் மகிழ.