பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
43

சர்வாதிகாரம் ஒரு காட்டுத்தீ. சாலை ஓரத்திலே வேலையற்றதுகள். வேலையற்றதுகளின் உள்ளத்திலே விபரீத எண்ணங்கள். அது தான் காலத்தின் குறி.நடந்ததை நடத்தவாறு உரைப்பது. இதழ் அறம். நல்லவன் வாழ்வான். நீதியே நிலையானது;தீர்ப்பன்று. பண்பாடு நிலையானது. பூகோளத்துடன் விஞ்ஞானம் சேரவில்லை என்றால் சூயஸ்கால்வாய் ஏது. பொது வாழ்விலே எரிமலை, அலைகடல், பூகம்பம் தீ எல்லாம் உண்டு?. போர் மனிதப் பண்புகளுக்கு நேர்மாறானது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்களாட்சி ஒரு வீட்டு விளக்கு. மறப்போம்;மன்னிப்போம். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு. மாறாக சமுதாயம் மறைந்துவிடும். முணுமுணுப்பு இன்று இடி முழக்கமாகிவிட்டது. முத்தமிழ் என்றால் அது முக்கணித் தோட்டம். மொழி காக்கப்படவேண்டும், இனம் அழித்து விடாமல் இருக்க. விடாமுயற்சி இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும். வீட்டிற்கோர் புத்தகசாலை நாட்டுக்கு நலந்தரும்.

F–6a