பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

 இன்புறுகிறோம் இசைத் தமிழை, முள்நீக்கிய பலாச் சுளைகளைப் போல்!

வாழை! தோலை உரித்ததும் பழத்தைச் சுலபத்தில் உண்ண முடிகிறது. தோலை உரித்தவுடனே வெகு எளிதிலே பழத்தின் பண்பைப் பெறுகிறோம். அதே போலத்தான் முத்தமிழின் மூன்றாவது பிரிவு, நாடக. மென்ற கூத்து. முக்கனி,கனிவகைகளில் சிறந்து விளங்குகின்றன! மொழிகளிற் சிறந்து விளங்குகிறது முத்தமிழ்!!

தமிழர் வாழ்வு தழைக்க தமிழ் மணம் நாடெங்கும் செழித்துக் கொழிக்க, தமிழர் தமிழராய் வாழ, தன் மானத்துடன் வாழ, தமிழன் தன்னைத்தான் உணர்ந்து. தன்னம்பிக்கை பெற்றுத் தன்னையும், தன்னைச் சுற்றிலுமுள்ள சமுதாயத்தின் சூழ்நிலையைத் தெரிந்து- புரிந்து - தெளிந்து - வாழும் நிலைக்கான வகையில்; வழியில், முறையில் முத்தமிழ் விளங்கவேண்டும். பயன்படவேண்டும்; பயன் படுத்தப்படவேண்டும்.

முத்தமிழ், சூழ்நிலையை மனித வாழ்வின் சூழ்நிலையை, வளப்படுத்தும் - வகையிலே பண்படுத்தப் படவேண்டும்; பரப்பப்படவேண்டும்; பயன்படுத்தம் படவேண்டும்.

வாலிபர்களாகிய நீங்கள் இந்த மாணவப் பருவத்திலே, முத்தமிழிலே பற்றுக்கொண்டு, முத்தமிழ் மூலம், நாட்டின் நிலையை - சூழ்நிலையை நன்கு தெரிந்து, நாட்டின் எதிர்கால ஏற்றத்திற்கான பற்று-பாசம் பயிற்சி - பெறவேண்டும்! பெற வேண்டும் தறிவின் துணைகொண்டு! பகுத்