பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

109 மூழ்கிவிட்டால், நஷ்டமும் மனக்கஷ்டமும் நெஞ்சை வெந்திடச் செய்யுமல்லவா? அதுபோலக் காந்தியாரைக் கயவன் கொன்றபோது, அவருடைய மனதிலே அருமை யான திட்டங்கள், நாட்டுக்குப் பலன் தரும் புதிய முறைகள், ஊசலாடிக்கொண்டிருந்தன. அதை எண்ணும் போதுதான் எவ்வளவு பெரிய நஷ்டம் இந்தச் சம்பவம் என்பது விளங்குகிறது. விடுதலை பெற்றுத் தந்ததோடு வேலை முடிந்தது என்று அவர் முடிவு கட்டவில்லை. நாட்டை மீட்க வேண்டும் -- நல்லாட்சி அமைக்கவேண்டும் - மக்களை நல்லவர்களாக்கவேண்டும், வீரம், திறம், விவேகம், மூன்றையும் விரும்பினார். மக்களை நல்லவர்களாக்க வேண்டும் என்பதே அவருடைய இறுதி இலட்சியம்.

நாட்டை மீட்க ஒரு ரணகளச் சூரரையும். நல்லாட்சி அமைக்க பல கலைவாணரையும் மக்களை நல்வழிப்படுத்த அறநெறி கூறுவோரையும் நாடியாக வேண்டும்; எந்த நாட்டுக்கும் அனைவரும் ஏககாலத்தில் கிடைக்கமாட்டார்கள். ஒரு தலை முறையிலே வீரன் தோன்றி விடுதலை நல்லாட்சி அமைப்பார். பிறிதோர் சமயம் பேரறிஞர் தோன்றி மக்களுக்கு காட்டுவார். நல்வழி இந்து மதத்திலே ஏறிப்போய் ஊறிப்போயிருந்த கேடுகளைத் தமது பரிசுத்த வாழ்க்கையாலும், தூய்மை யான உபதேசத்தாலும், புதிய விளக்க உரைகளாலும் நீக்கும் காரியத்தில் ஈடுபடலானார்; அன்பு தழைக்கவேண்டும் என்றார். நெறி