பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


நசுக்கப்பட்ட மக்களுக்குக் கைகொடுத்தலர்கள். ஆதிக்கப்பீடங்களான அரண்மனைகளையும் மடாலயங்களையும் அச்சமின்றி எதிர்த்து நின்று அறப்போர் நடத்தி மக்களின் நல்வாழ்வுக்குப் பாடுபட்டவர்களின் வரலாறுகள், மனதைக் கவருகின்றன.

🞸🞸🞸

அழகு, இன்பம், காதல், மாந்தோப்பில் மங்கை நல்லாளைச் சந்திப்பது போன்ற கதைகள். சுவை தருகின்றன; சில சமயம் பயனும் தருகின்றன. ஆனால் அந்த ஏடுகளிலேயே நாம் தேடும் இலட்சியம் முழுவதும் இருப்பதில்லை, மாறுகிறது.

🞸🞸🞸

ஆற்றல் வளரும் பருவத்தை அடைந்ததும், வீரச் செயல்கள், களக்காட்சிகள், அரசு அமைக்கும் அருஞ் செயல்கள் ஆகியவைகளைப்பற்றிப் புத்தகங்கள் பெரிதும் கவர்ச்சி தருகின்றன.

🞸🞸🞸

அலெக்சாண்டரின் ஆற்றல், ஜுலியஸ்சீசரின் வீரம், நெப்போலியனின் பேரார்வும், பேரரசுகள் அமைந்த விதம், அழிந்த வகை, ஆகியவை பற்றிய நிகழ்ச்சி நிகண்டுகள் மனதைக் கவர்ந்ததுடன், தாய் நாட்டில், தமிழகத்தில், அத்தகைய மாவீரர்கள், மணிமுடிதரித்த மன்னர்கள். கடல் கடந்து சென்று வெற்றிக் கொடி நாட்டிய வேந்தர்கள், ஆகியவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும், தாய்த் திருநாட்டின் தனிச் சிறப்பை உணர்ந்து உலகுக்கு உரைக்கவேண்டும், என்று ஆர்வம் கிளம்பி, தமிழ்ச் சுவடிகளைத் துருவித்துருவிப்