பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

86 ஏற்படவேண்டும். பிறகுதான் ஓய்வைச் சுவைக்க முடியும். வேலை, மனிதத் தன்மையை மாய்க்காத அளவு இருக்க வேண்டும். ஓய்வு சிலருக்கு - வேலை பலருக்கு என்ற -முறை மாறினாலொழிய ஓய்வு சமூக உயர்வுக்குப் பயன்படும் பண்பு ஆக முடியாது. ஓய்வு

வாழ்க்கைத்தரம் மட்டமாக இருக்கும் சமூகத்திலே. கிடைத்துப் பயனில்லை. பொருளும் இல்லை. வேகாத பண்டத்தை வெள்ளித் தட்டிலே வைத்துத் தரும் வீண் வேலையாகும். ஓய்வு உயர்ந்த பண்புள்ள நண்பன் மூலம் தாம் என்ன பெறமுடியுமோ அவ்விதமான மனமகிழ்ச்சி யைத் தருவதாக அமைத்துக் கொள்ள வேண்டும். அது இன்றுள்ள சமூக, பொருளா தார அமைப்பு முறை யில், சாத்தியமாகுமா என்பது மிகமிகச் சந்தேகம். உதக மண்டலத்து வனப்பு, கொடைக்கானல் குளிர்ச்சி, குற்றாலக் கவர்ச்சி, இவைகளைக் கண்டு களிக்கும் பொழுது போக்கு - ஓய்வு - எவ்வளவு பேருக் குக் கிடைக்க முடியும்? வாழ்க்கைத் தரம் பொதுவாக உயர்ந்தாலொழிய இத்தகைய 'உல்லாசம்' சிலர் சொல்லப் பலர் அதிசயிக்கும் பேச்சளவாகத்தான் இருந்து தீரும்.