பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மேடைப் பேச்சு இந்நாட்களில் மேடைப் பேச்சு, நாடாளும் நற்பணியில் முக்கியமான கருவியாகிவிட்டது.

திசை காட்டும் கருவி தீயோனிடம் சிக்கினால் கலம் பாறையில் மோதுதல் போல, அரசுகளை ஆட்டிவைக்கும் அளவுக்கு ஆற்றல் அமைந்த மேடைப் பேச்சு எனும் சக்தி, சாதனம், ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்து, அவர்களும் அந்தச் சக்தியைத் தவறான காரியத்துக்குப் பயன் படுத்துவதால், மக்களின் நலன், பாறை மோதிய கலமாகும்.

ஆள்பவர், ஆளப்படுவர் எனும் இருசாராருக்கும். மேடைப் பேச்சு, ஒரு சமயம் வாளாக, பிறிதோர் சமயம் கேடயமாக, ஒரு சமயம் விளக்காக, வேறோர் சமயம் தீப்பந்தமாகப் பயன்படுகிறது. மக்களுக்கு ஆள்பவர்களின் தன்மை, நோக்கம் திட்டம் இவைகளைப் பற்றிக் கண்காணிக்கும் பொறுப்பு அதிகரித்துவிட்டது. இந்தக் கண்காணிப்பு வேலைக்கு மேடைப் பேச்சு முக்கியமான துணையாகிறது. அலைகடலை அடக்கும் மரக்கலம் அமைத்தோர். ஆழ்கடலுக்குள்ளே செல்லும் கலம் அமைத்தோர், விண்ணில் பறக்கும் விமானம் அமைத்தோர், தொலை விலுள்ளதைக் கேட்கவும் காணவும் கருவிகள் கண்டு பிடித்தோர், காட்டாறுகளைக் கட்டுக்குக் கொண்டு அ. 7-600