பக்கம்:அண்ணா கண்ட தியாகராயர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


கோடம்பாக்கத்திலே ஒரு சாமியார் சமாதியிலிறங்கப்போன செய்தியையும் அய்யப்பன் கோயிலிலே பாம்பு வந்துபோன செய்தியையும் மக்கள் பகுத்தறிவுபெற்றுவரும் இந்த நாளிலே மக்களின் அறிவுத்தூதுவனாக இருக்கவேண்டிய பத்திரிகைகள் வெளியிடுவது நல்லதல்ல.

மக்கள் மனத்தை மாய்த்துச்சாய்க்கும் மடமை ஒழிந்து மறுமலர்ச்சி தனது வேகமுத்திரையைப் பொறித்துக்கொண்டிருக்கிறது. உலகில் மூட நம்பிக்கை, முறியடிக்கப்பட்டு, முன்னேற்ற எண்ணங்கள் முகிழ்த்துக்கொண்டு வருகின்றன நாள்தோறும்.

இத்தகைய சூழ்நிலையை வளமாக்கி பாதையைச் செப்பனிடும் பொறுப்பு பத்திரிகையாளர்களுடையது, மதத்தை ஒழித்து, மூடப்பழக்கங்களை முறியடித்து, மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தவே நாம் இன்று பாடுபடுகிறோம்.

நம்திட்டம்—அவர்கள் நிறைவேற்றுவார்கள்

சட்டசபையில் இனி அமரப்போகும் மந்திரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் நம்மவர்களாகவே இருப்பார்கள். நமக்கு வேண்டியது பதவி அல்ல! பதவியிலிருப்போர் நம்மவர்களாகவே இருக்கிறார்கள், இருப்பார்கள். நாம் நெடுநாளாக கூறிவரும் திட்டங்களை நாம் போய்த்தான் நிறைவேற்றவேண்டுமென்றில்லை. எதிர்பாராதபடி பிறர் நிறைவேற்றியே வருகிறார்கள். இனியும் இதுபோல பல சட்டங்களை நிறைவேற்றுவது உறுதி. திராவிடப் பெருங்குடி மக்களிடையே இன்று ஏற்பட்டுள்ள எழுச்சி வருங்காலத்திலே பெரும்பயன் அளிக்கும். அரசியல், பொருளாதாரம்—இவற்றிலே நாம் இனி நல்ல உயர்வை எதிர்பார்க்கமுடியும்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆதரித்து மந்திரி மாதவமீனனே அகில இந்திய ரேடியோவிலே பேசக்கூடிய நிலை வந்திருக்கிறது! கதராடையும் காந்திகுல்லாயும் தரித்திருக்கும் காங்கிரஸ்காரர்களிலே பலபேர் இன்று வகுப்பு