பக்கம்:அண்ணா காவியம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னேற்றப்படலம்
103

அய்யாவும் தனிமையிலே தவிக்க வில்லை!
அகலாத வீரமணி, இராசா ராமன்,

மெய்யாய்வே தாசலனார், சனார்த்த னம், தாள்
"விடுதலை"யில் குருசாமி, தொண்டன் யாக்கூப்,

பொய்யாத நரசிம்மன் போன்றார் - தந்தை
புகழ்பரப்ப அந்நாளில் துணிந்து வந்தோர்...

வையாத நேரமில்லை; "மாவட் டத்தில்
வளர்ந்திடுமா, இச்சிறுவர் கூட்டம்?" என்றார்.



தனியாகக் குடித்தனம்போ! சல்லிக் காசு
தரமாட்டேன்! எனத்தந்தை சொல்லி விட்டால்......

இனியாது செய்வோம்? என் றிருக்க லாமா?
இளைஞருக்கு வருங்காலம் இருட்டாய்ப் போமா?

கனியாத காய்மனமும் பண்ப டுத்தும்
கருணைவள்ளல் அண்ணாவும் முடுக்கி விட்டார்?

மனிதாபி மானமிகுங் கொள்கை சொல்ல
'மாலைமணி' நாளேடும் துவங்கச் செய்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/105&oldid=1079746" இலிருந்து மீள்விக்கப்பட்டது