பக்கம்:அண்ணா காவியம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



களம்புகு காதை


திருச்சியிலே நான்குநாள் மாநாட்டுக்குத்
தேர்ந்தெடுத்தார் பந்தயத்துத் திடலை அண்ணா!

மருட்சியுடன் மாற்றார்கள் உற்றுப் பார்த்தார்:
மாபெரிய இடந்தேடல் வீணாம் என்று!

பொருட்காட்சி; பந்தரிலே புதுமை எல்லாம்
புரிவதற்கும் இருதிங்கள் முகாமும் இட்டோம்;

இருட்சிறையின் எதிர்ப்புறத்தில்! அம்பி லாரின்
இணையற்ற துணைவர்கள் தொண்டு கண்டோம்!




அதுவரையில் சட்டமன்ற அருகில் கூட
அணுகாத அரசியலைப் பேணுங்கட்சி,

இதுவரையில் யாராலும் இயலா வண்ணம்
ஈடற்ற மாநாட்டை நடத்திக் காட்டிப்,

பொதுமக்கள் கருத்துக்கு மதிப்பளிக்கப்
புதுவழியைக் கையாண்ட கதையைக் கேட்பீர்!

பொதுமுறையில் வாக்களிக்கப் பெட்டி வைத்துப்,
போட்டிருந்த சீட்டுகளை எண்ணிப்பார்த்தோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/117&oldid=1079781" இலிருந்து மீள்விக்கப்பட்டது