பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

119


செய்திருக்கீங்க! உங்களுக்கெல்லாம். அவ்வளவு தைரியம் வந்திடுச்சா? இனிமெ யாரும் எங்கிட்ட வராதீங்க, போங்க!” என்கிறார் அண்ணா. முகம் சினத்தால், கொதிக்கிறது!

“என்னண்ணா விஷயம்” என்று கேட்கிறேன். என் வாயிலிருந்து வந்த சத்தம் எனக்கே காதில் விழவில்லை!

“யாரைக் கேட்டுக்கிட்டு மெயின் எண்ட்ரன்ஸ் முகப்பு அந்த ஆளைப் போடச் சொன்னிங்க? நல்லா மூக்கை உடைச்சி அனுப்பிட்டாராமே! அவர் போட மாட்டேண்ணு சொன்னது தப்பில்லே? நீங்க அவருகிட்டே இப்ப போனது தப்பு! நான் டிசைன் வரைஞ்சி குடுத்த மாதிரி, 1967 என்று நுழைவாயில் முகப்பு போடுங்க. என்ன செலவானாலும் நாமே செய்வோம்! நீ போ! அவரை வரச் சொல்லு!” என்று, என்னைத் துரத்தாத குறைதான்!

நான் புரிந்து கொண்டேன். நீலநாராயணன் தவறு செய்து விட்டதாக அண்ணா நினைக்கிறார். அவர் வந்து வாங்கிக் கொள்ளவேண்டிய வசவுகளை, அவர் சார்பில் நான் வாங்கி, அவரிடம் சேர்ப்பிக்கவேண்டும். இங்கும் தபால் வேலை? அண்ணா கோபத்தை நான் தாங்கிக் கொள்வேன்! அவர்களால் முடியாது! மேலும் இது என்னைத் திட்டியது அல்லவே!

மெதுவாகக் கீழிறங்கி, அங்கு நடுக்கத்துடன் நின்றி ருந்த நீலத்திடம், என் தலைமீது சுமந்து வந்த ஒரு சுமையை இறக்கி, அவர் தலைமீது வைப்பது போல் பாவனை செய்தேன். அந்த நிலையிலும் அவருக்குச் சிரிப்பு வந்து விட்டது. வெளியில் சென்றோம் விரைந்து.

மாநாட்டுக்கு முந்திய நாள்-அதாவது 28.12.1966 அன்று எல்லோரும் ஊர்வல ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்று விட்டனர். ஒவியக்கூடத்தில் தயாரான