உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா பேசுகிறார்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


லாளர் ஸ்தாபனங்களிலே, ஒற்றுமைக்குறைவு ஏற்பட்டு, அதன் விளைவாக, அதனுடைய போரிடும் சக்தி சிதறிவிட்டதுண்டு. பெரிய மரங்களை மாளிகை மண்டபத்துக்குத் தூண்களாக அமைத்துவிட்டால் மட்டும் போதாது. மிக மிகச் சாதாரண செல், மரத்திலே சிறு துளைகளிலே புகுந்துகொள்ளாதபடியும் பார்த்துக்கொள்ள வேண்டும்—செல் அரிக்க ஆரம்பித்தால் செம்மரமும் சரி, எம்மரமும் சரி, கெடும்—அதனுடன் ஸ்தாபனமும் கெடும். தாங்கும் சக்தி, தாக்கும் சக்தி இரண்டும் ஒரு சேர ஒரு ஸ்தாபனத்துக்குத் தேவை. அதற்கேற்ற வகையிலே அந்த அமைப்பு இருக்கவேண்டும்—இருக்கவேண்டுமானால், இருவகை சக்திகளையும் திரட்டவும், திரட்டியதை உபயோகிக்கவும், ஏற்ற தகுதி படைத்தவர்கள் ஸ்தாபனத்தில் இருக்கவேண்டும். ஒருவர் இருப்பது மற்றவருக்கு வலிவு, என்ற எண்ணம் குன்றாது குறையாது இருக்கவேண்டும். அந்த எண்ணத்தாலேயே ஸ்தாபனத்தின் ஐக்கியத்தைக் குன்றாமல் காப்பாற்ற முடியும். கொள் கைகள், நிலைமைகளால் மாற்றமடையும்போது, ஸ்தாபன ஐக்கியத்துக்கு ஆபத்து நேரிடக்கூடும். அதுபோலவே, ஸ்தாபனத்தில் நடைமுறையின்போது, யார் எதைச் செய்வது, எது எப்படிச் செய்யப்படவேண்டும், என்ற பிரச்சினைகள் கிளம்பி, அதன் பயனாக ஸ்தாபன ஐக்கியம் கெடுவதுண்டு. ஆனால், அடிப்படை பலமாக இருந்தால் மாளிகை கெடாதிருப்பதுபோலக், கொள்கை பலமிருந்தால் ஸ்தாபனம் கெடாது. ஆனால் அதற்காக, ஸ்தாபனத்தின் ஐக்கியம் கெட்டுவிடத்தக்க நிலைமைகள் ஏற்படும்போது, அக்கறையற்று இருந்துவிடவும் கூடாது. தொழிலாளர் ஸ்தாபனம், மனக்குறையின் மீதும், அதனால் இயற்கையாக ஏற்படக்கூடிய ஆத்திரத்தின் மீதும், ஏற்பட்டுவிடுவது உண்டு. இவை சரியான அடிப்படை அல்ல. வாழ்வதற்கு உழைக்கிறோம். ஆனால் வாழ்வு இல்லை. உழைக்காது வாழ்கிறார்கள். அந்த வாழ்வுக்குத் தங்குத் தடை இல்லை. வாழ்வோம் அனைவரும்—வாழ உழைப்போம்—ஒருவர் உழைப்பின்மீது மற்றொருவரின் வாழ்வு அமைக்கப்படும் அநீதியை ஒழிப்போம்—என்ற அடிப்படைகளின் மீது கட்டப்பட்டுள்ள தொழில் ஸ்தாபனங்கள் அந்த உன்னத மான இலட்சியம் ஈடேறவேண்டும் என்ற பெரு நோக்கத்தை உறுதுணையாகக்கொண்டு ஸ்தாபனத்தின் நடைமுறை வேலையில், உறுப்பினர்களுக்குள் உள்ளக் கொதிப்போ, கசப்போ ஏற்படாதவகையிலும், இன்னார் செய்கிற காரியம், இன்னாருக்குச் சரி என்று படவில்லை என்ற நிலை ஏற்படாதவகையிலும், ஸ்தாபனத்தின் வேலைகளில், அவரவர்களுக்கு அவரவர் ஆற்றலுக்கேற்ற ஆனால், ஸ்தாபனத்தின் மூலக் கொள்கைக்கு ஊறு நேரிடாத