5
- ஆமாம், அரசே! ஆறுகால பூஜையும் நடந்து வருகிறது!
- வைசியர்கள், செல்வ விருத்திக்கான காரியத்திலே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களா?
- ஆமாம்! அரசே, வைசியர்கள் வியாபாராதி காரியங்களிலே ஈடுபட்டு வருகிறார்கள்!
- சூத்திரர்கள், தங்கள் கடமையைச் செய்து வருகிறார்களா?
- ஆமாம் அரசே!
இதுதான் ‘தர்பார்’ பேச்சு! அரசனை ஆசீர்வதிக்கும் குரு, மனுநீதி தவறாது அரசாளும்படிதான், மன்னனுக்கு உபதேசம் செய்வார்!
இது, மனுவை மறுக்கும் காலமட்டுமல்ல, மன்னர்களை வீட்டுக்கனுப்பிய காலம்.
நாடக மேடை மாற வேண்டாமா, இதற்கு ஏற்றபடி!! அதுதான் மறுமலர்ச்சி.
விதி, மேலுலகம், குலத்துக்கொரு நீதி, எனும் மூன்று கருத்துக்களை உள்ளடக்கியே நாடகங்கள் அமைவது வாடிக்கை—இடையிடையே பத்தினியின் துயரம், அதைப் பகவான் துடைப்பது—அடியாருக்குச் சோதனை, கடைசியில் ஐயன் காட்சி தருவது, இவை இருக்கும்.
மறுமலர்ச்சி இயக்கத்தினர் நாடக மேடை மூலம் தரப்பட்டு வந்த இந்த கருத்துகள், இன்று தேவையற்றன, தீமை பயப்பன, நீதியற்றன, நேர்மையற்றன, சமுதாயப் பொது நலனுக்கு ஊறு தருவன, என்று கண்டறிந்து, புதிய எண்ணங்களை, புது உலகுக்குத் தேவையான எண்ணங்களைக் கொண்ட கருத்துகளை, நாடக மேடைகள் தரவேண்டும் என்று கூறினர்—குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளனர்.
இந்தப் பதினைந்து ஆண்டுகளின் நாடக உலக வரலாற்றை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு, ஒரு அதிசயமான, உண்மை புலனாகும். இந்தப் பதினைந்து ஆண்டுகளில், புதிதாக அரங்கேற்றப் பட்ட புராண நாடகங்கள் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் இல்லை. புராணங்கள் இல்லாததால் அல்ல ஏடுகளிலே புராணக்கதைகள் இரண்டு தலைமுறைகளுக்குத் தேவையான அளவு உள்ளன! எனினும், நாடக மேடைகளிலே, வரவில்லை. மாறாக மனிதன், இன்ஸ்பெக்டர், வேலைக்காரி, வேலைக்காரன், வாழ முடியாதவர்கள், முள்ளில் ரோஜா, மணமகள், கைதி, அந்தமான்