இணைந்த அழகு
43
சாஸ்திரிகள், “இவன் யார்?” என்று மகாராஜாவைக் கேட்டார்.
“இவனா? இவன் நமக்குப் பிரியமானவன்; சமையற்காரன்” என்றார் மகாராஜா.
தன்னைப்பற்றிய பேச்சு வருவதை உணர்ந்த அந்தக் குரூபி தலை நிமிர்ந்து புன்முறுவல் பூத்தான்.
“சாஸ்திரிகளுக்கு இவனைக் கண்டால் ஆச்சரியமாக இருக்கிறதோ? இந்தமாதிரி ரூபத்தை வேறு எங்கும் பார்த்திருக்க மாட்டீர்கள். காவியங்களிலே வருணித்திருக்கிறார்களே, அந்தப் புருஷர்களிலே இப்படி ஒரு பிரகிருதி அகப்படுமா?” என்று அரசர் சொன்னார்.
“இந்தமாதிரி யாரையாவது பார்த்திருந்தால் கவிகள் வர்ணித்திருப்பார்கள். அவர்கள் பாராத தோஷத்தால்தான் அத்தகைய வருணனை நமக்குக் கிடைக்கவில்லை” என்றார் சாஸ்திரிகள்.
“இப்போதுதான் இவனைப் பார்த்துப் பிரமித்து விட்டீர்களே! நீங்கள் இவனைப்பற்றி ஒரு சுலோகம் சொல்லுங்களேன்!” என்று மகாராஜா விளையாட்டாகச் சொன்னார். சாஸ்திரிகள் வேடிக்கையாகப் பேசுபவர்; நல்ல ரசிகர்; ஆசுகவி; நினைத்தால் ரஸமாகச் சுலோகங்களை இயற்றும் பழக்கம் உடையவர்.
“அப்படியே செய்தால் போகிறது!” என்றார் சாஸ்திரிகள்.
மகாராஜாவுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. சாஸ்திரகளிடமிருந்து மிகவும் ரஸமான சுலோகம் ஒன்று