பக்கம்:அநுக்கிரகா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

அநுக்கிரகா

நிதானமும் கன்ஸர்வேடிவ் மனப்பான்மை உள்ள வருமான முத்தையாவுக்குக் கூட ஒரு தவிர்க்க முடியாத தேர்தல் வெறி வந்திருந்தது, தோற்றுவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்விலும் ஜெயித்துவிட வேண்டும் என்ற நம்பிக்கையிலும் மூண்ட வெறியாய் இருந்தது இது. வீடே எலெக்ஷன் ஆபீஸாக மாறியிருந்தும் இந்த வெறிதான் அவரைச் சகித்துக் கொள்ள வைத்திருந்தது. கடைசி நாளுக்கு முந்திய நாள் பொன்னுரங்கம் வந்து, "அவங்க தரப்பிலே எவர்சில்வர், பாத்திரமும் கொடுத்து ஓட்டுக் கேட்கிறாங்க! நாமும் எதினாச்சும் பண்ணியாகணும், உடனே பத்தாயிரம் கைத்தறிப் புடவை வேணும், என்றான்.

"முத்தையா கோபமாகக் கேட்டார். உடனே பத் தாயிரம் புடவைகளுக்கு எங்கேப்பா போறது?

"அதெல்லாம் கவலையை விடுங்க, இங்கே கோடௌன் தெருவிலே கைத்தறிச் சேலை ஸ்டாக்கிஸ்ட் ஒருத்தர் இருக்கார். இப்போ... போன் பண்ணினாப் பதினைஞ்சு நிமிஷத்துக்குள்ளார லாரியிலே கொண்டாந்து வீட்டு வாசல்லே இறக்கிடுவாங்க.

"பணம் என்ன ஆகும்? விலை விவரம் எதுவும் பேசிக்க வேணாம்?

"பேசிக்கலாம். ஐம்பது-— அறுபது ரூபாயிலே நல்ல புடவையாகக் கிடைக்குங்க, தோதாப் பேசிச் சல்லிசாகக் கொடுப்பார். கிரடிட்டிலே. வாங்கிக்கலாம். எலெக்சன் முடிஞ்சப்புறம் பணம் செட்டில் பண்ணிப்போம். .

"பத்தாயிரம் புடவையை வச்சு எத்தினி வோட்டைப் பிடிக்க முடியும்? நம்பிக்கையாக ஓட்டுப் போடறவங்க கையிலே புடவை போய்ச் சேருமா? அல்லது புடவையை வாங்கிட்டு ஏமாத்திடுவாங்களா? நடுவே வேற யாராவது புடைவைங்களை அமுக்கி, மறுபடி கடையிலே கொண்டு போய் வித்துப் பணம் பண்ணிடப் போறாங்க, ஜாக்கிரதை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/90&oldid=1259175" இலிருந்து மீள்விக்கப்பட்டது