பக்கம்:அநுக்கிரகா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

அநுக்கிரகா

பொதுத் தேர்தல், ஜனநாயக முறைகள் எல்லாம் அரைவேக்காடுகளிடமும், இடைத் தரகர்களிடமும் சிக்கி எவ்வளவு கொச்சையாக வேண்டுமோ அவ்வளவு கொச்சையாகி இருந்தன, ஆவாரம்பட்டு சமஸ்தானம் இப்போது இல்லை. ஆனால் அதைப் போல பத்து சமஸ்தானங்களும், சொத்தும், ஐஸ்வரியமும் இருந்தால் கூட ஒரு எம்.எல்.ஏ. : பதவிக்குச் செலவழிக்கக் காணாது போலிருந்தது. அதிக லாபமில்லாத அல்பமான - ஒரு சிறு நன்மையையும் வீம்பையும் கருதிக் கணக்கு வழக்குப் பாராமல் செலவழித் துக் கொண்டிருந்தார் முத்தையா, தேர்தல் தினத்தன்று தெருக்களில் பூத்களில் எலெக்ஷன் ஏஜெண்டாகப் போகிறவர்களுக்கும் மற்றப் பணியாளர்களுக்கும் தினப்படி சாப்பாடு முதலிய செலவுகள் இருந்தன. நூறு கார்கள், இருபது வேன்கள், ஆறு லாரிகள் தேர்தல். வேலைக்காக ஓடிக்கொண்டிருந்தன. பெட்ரோல், டீஸல் தண்ணீராகச் செலவழிந்து கொண்டிருந்தன, தேர்தல் நாளுக்கு முன் தினம் பிரசாரம், கோஷம், கூப்பாடுகள் அடங்கியிருந்தன. பகல் மூன்று மணிக்கு அவரது நண்பரான காப்பி எஸ்டேட் அதிபர் ஒருவர் அவரைப் பார்க்க வந்திருந்தார். தெரியாத் தனமாக மகளை அரசியலில் இறங்கச் செய்துவிட்டுத் தேர்தல் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவது பற்றி முத்தையா அந்த நண்பரிடம் வருத்தப்பட்டுக் கொண்டார், அலுத்துக் கொண்டார்.

அவர் சொன்ன காரணங்களையும், விவரங்களையும் கேட்டுவிட்டு எஸ்டேட் அதிபர் சிரித்துக் கொண்டார்.

“இந்தப் பங்களாவைச் சுத்தி இருக்கிற அசுத்தங்களைப் போக்கி நீங்க விரும்பற மாதிரி பண்ணணும்கிறதுக்காக வீணுக்கு இவ்வளவு செலவழிச்சிருக்க வேண்டாம். இதை வித்துட்டு பெஸண்ட் நகர்லே அம்பது கிரவுண்ட் கடல் ஓரமா வாங்கிக் கட்டித் தோட்டமும் துரவுமாகப் பிரமாதமாக வீடு கட்டியிருக்கலாம்.

"செய்யலாம்! ஆனால் இந்தப் பங்களாளோட எனக்கு இருக்கிற சென்டிமென்ட்டல் 'அட்டாச்மெண்ட்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/92&oldid=1259179" இலிருந்து மீள்விக்கப்பட்டது