பக்கம்:அந்தமான் கைதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

 பாலு : என்ன! திவான் பகதூரா! உங்கள் வீட்டுக்கா! பிறகு?

லீலா : அண்ணனைக் கண்டதும் அம்மாவுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேனென்று என்னென்னமோ பீடிகை போட்டுக் கடைசியில் சுற்றி வளைத்து சம்பந்தப் பேச்சுக்கு வந்துவிட்டார். இதைக் கேட்டதும் நான் நடுங்கியே போய்விட்டேன்.

பாலு : அப்புறம் முடிவு என்ன ஆயிற்று? லீலா அதைத்தானே சொல்லுகிறேன்; அதற்குள் பொறுக்கவில்லையா?

பாலு : வீணாகக் கதையை வளர்க்கவேண்டாம்; முடிவு என்ன?

லீலா : முடிவு என்ன, இந்தப் பேச்சு நடந்துகொண்டிருக்கும்போது அண்ணா வந்தார்...

(சிரிக்கிறாள்)

பாலு : என்னதான் நடந்தது சொல்லேன்; நானும் சேர்ந்து சிரிக்கிறேன்.

லீலா : கொஞ்ச நேரம் அண்ணா சம்மதிப்பவர்போல் விளையாட்டாகப் பேசிக்கொண்டே போனார். நான்கூட ஏமாந்துவிட்டேன். அப்புறம் திடீரென்று ஆல்ரைட் திவான்பகதூர்! கிளம்பலாம் என்று......... அப்பா... அப்பொழுது அண்ணாவுக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டுமே! என்ன நடந்து விடுமோ என்று எனக்குப் பயமாகவே இருந்தது.

பாலு : அப்புறம்;

லீலா : கடைசியில் மாமாவந்து நான் திவான்பகதூர் என்பது உண்மையானால் உன்னை என்ன செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/74&oldid=1069672" இலிருந்து மீள்விக்கப்பட்டது